•  

மசாஜ் செய்து மனதை கவருங்களேன்….

Massage
 
மசாஜ் செய்வதன் மூலம் ஒருவரின் உடலையும் மனதையும் லேசாக்க முடியும். அதனால்தான் பலரும் இன்றைக்கு உள்ள பரபரப்பான சூழலில் ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும் மசாஜ் பார்லரை நோக்கி ஓடுகின்றனர். அங்கு செய்யப்படும் மசாஜ் மூலம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் ரிலாக்ஸ் ஆகி மனமும் உடலும் புத்துணர்வு அடைகிறது. இதே மசாஜ் முறையை படுக்கை அறையில் வாழ்க்கை துணைக்கு செய்துபாருங்களேன். அன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் சுகமே அலாதியானதாக இருக்கும்.மசாஜ் செய்வதற்கு ஆயில் அவசியமானதுதான். ஜோஜோபா ஆயில் மசாஜ் பார்லர்களில் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. ஆனால் படுக்கை அறையில் மசாஜ் செய்வதற்கு எண்ணெய் தேவையில்லை. கைகளால் கொடுக்கும் அழுத்தமும் மென்மையுமே போதுமானது.படுக்கை அறையில் மிதமான ஒளி வெள்ளத்தில் இதமான இசையை கசியவிடுங்கள். உங்கள் கைகள் தான் முக்கிய அம்சம் தலையில் இருந்து தொடங்குங்கள். உங்களின் விரல்கள் மென்மையாய் இதமாய் தலையை கோதிவிடட்டும். அதிலேயே கிறக்கம் வரும். நெற்றிப் பொட்டில் மிதமாய் அழுத்திவிட்டு சின்னதாய் முத்தமிடுங்கள். பின்னங்கழுத்தில் கொஞ்சம் அழுத்தமாய் பிடித்துவிட அத்தனை வலிகளும் பறந்து போகும். காதுகளை மெதுவாய் நீவிவிட்டு கொஞ்சம் பிடித்து விடலாம்.கொஞ்சம் கீழிறங்கி தோள்களில் மிதமாய் அழுத்தி நீவி விடுங்கள். ஒவ்வொரு பகுதியையும் மெதுவாய் பிடித்து சின்னதாய் அழுத்தம் கொடுங்கள் இதம் கிடைக்கும். முதுகுப் பகுதியில் லேசாக தடவி விட்டு பின்னர் இரண்டு கைகளையும் வைத்து சற்றே அழுத்தமாய் நீவுங்கள். உங்களவரின் மேலே அமர்ந்து கொண்டு முதுகுப் பகுதியில் மசாஜ் செய்வது கூடுதல் கிக் ஆக இருக்கும்.அதேபோல் கைகளை அழுத்தமாய் தேய்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பிடித்து விடுங்கள். விரங்களில் சொடுக்கு எடுங்கள். படுக்கை அறையில் செய்யப்படும் இந்த மசாஜ்க்கு கிடைக்கும் சுகமே அலாதிதான்.கால்களில் கீழ் இருந்து மேல் நோக்கி மெதுவாய் பிடித்து விடுங்கள். ஆடு சதையில் லேசாய் ஒரு அழுத்தம் கொடுப்பது கூடுதல் சுகம் கிடைக்கும்.அதேபோல் பாதங்களில் மென்மையாய் பிடித்து விட்டு விரல்களில் சொடுக்கு எடுத்து விடலாம். பின்னர் திருப்பி விட்டு மார்புப்பகுதியில் தொடங்கி வயிறு வரை லோசாய் அழுத்தம் கொடுத்து நீவி விடலாம். இது போன்று மசாஜ் செய்து விடுவதன் மூலம் இருவருக்குமே ஒருவித தெய்வீக அனுபவம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.உங்கள் துணைக்கு செய்து விட்டு அசத்துங்களேன்.!
English summary
Every massage can be a sensual experience in that it stimulates all of your senses simultaneously, according to Vance. The most important thing to remember is to take your time and enjoy the experience. "A massage between couples should be a relaxing and enjoyable experience.
Story first published: Tuesday, August 7, 2012, 12:57 [IST]

Get Notifications from Tamil Indiansutras