•  

ஒரே நேரத்தில் மனைவி, காதலி... தப்பி்ல்லையாம்!

Have an affair to save your marriage
 
மனைவியும் வேண்டும், அதேசமயம் மனப்பூர்வமாக காதலிக்கும் காதலியையும் விட முடியாது... என்ன செய்யலாம்... இந்தப் பிரச்சினை இப்போது நிறையப் பேர் மனதை போட்டுக் குழப்பியடித்து வருகிறது. அதற்குத்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு நிவாரணம் சொல்லியுள்ளார்.காதல் எப்போது வரும், எப்படி வரும், ஏன் வருகிறது என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது.. எந்த வயதில் வந்தாலும் அதற்குப் பெயர் காதல்தான். அதேசமயம், திருமணமானவர்களுக்கிடையே காதல் வரும்போதுதான் சிக்கலாகி விடுகிறது. அதற்கு கள்ளக்காதல் என்று சமூகம் பெயர் வைக்கிறது. ஆனால் அது தவறு என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த காத்தரின் ஹக்கீம் என்ற பெண் எழுத்தாளர். இவர் ஒரு உளவியலாளரும் கூட."The New Rules of Marriage: Internet Dating, Playfairs and Erotic Power" என்ர நூலை எழுதியுள்ள காத்தரின், இந்த சிக்கலான உறவு குறித்து விலாவாரியாகப் பேசுகிறார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...இன்று திருமணமான பலருக்கும் வயதைத் தாண்டிய நிலையில் காதல் மலருவது இயல்பாகி வருகிறது. இதைத் தவறு என்று சொல்கிறது சமுதாயம். ஆனால் என்னைப் பொறுத்தவரை காதல் வருவதை யாரும் தடுக்க முடியாது, தவிர்க்க முடியாது. அது எந்த வயதில் வருகிறது, எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்பதைப் பொறுத்தது அது.ஆனால் திருமணமானவர்களுக்கிடையே காதல் மலரும்போது அதற்கு தவறான பெயர் கொடுக்கப்படுகிறது. அதை சமுதாயம் எதிர்க்கிறது, தவறாகவும் பார்க்கிறது. இதனால் பலர் விவாகரத்து வரை போய் விடுகிறார்கள்.இந்த இடத்தில்தான் நாம் பிரெஞ்சுக்காரர்களைப் பார்க்க வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்தல் என்ற கொள்கை பிரெஞ்சுக்காரர்களிடம் மிகப் பெரிய அளவில் உள்ளது. ஒரே சமயத்தில் மனைவியுடனும், காதலியுடனும் சந்தோஷமாக இருக்கும் திறமை, வித்தை அவர்களுக்கே உரித்தானது.மேலும் காதல் வந்தால் அவர்கள் அதை மூடி வைக்கவோ, அழிக்கவோ, மறக்கவோ நினைப்பதில்லை. மாறாக வரவேற்கிறார்கள். காதலியுடன் நெருங்கிப் பழகும்போது தங்களது மனைவி அல்லது கணவருடனும் பாசம் அதிகரிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.ஒரே நேரத்தில் மனைவி மற்றும் காதலியுடன் சந்தோஷமாக, பாசமாக, அன்பாக இருக்க முடிவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அது சாத்தியமும் கூட.உறவுகளை வெற்றிகரமாக பராமரிப்பதில் பிரெஞ்சுக்காரர்கள்தான் நம்பர் ஒன் என்பது எனது கருத்து. தத்துவார்த்தமாக அவர்கள் காதலையும், நேசத்தையும் அணுகுகிறார்கள். அதாவது உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள்.யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், கண்ணியம் கெடாத வகையில் அன்பைப் பரிமாறிக் கொள்வது சாத்தியம்தான் என்பது அவர்களின் வாதமாகும். அதை நிஜத்திலும் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.அதற்காக எல்லோரும் ஆளுக்கு ஒரு மனைவி மற்றும் காதலியுடன் உலா வர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை நீங்கள் கொல்ல முடியாது என்பதே எனது கருத்து. அது சாத்தியமும் இல்லை. யாருடய மனதையும் பாதிக்காத வகையில் அதை எப்படி அணுகுவது என்பது மட்டுமே உங்களுடைய பிரச்சினையாகும்.மிகுந்த பொறுப்புணர்வுடனும், நிதானத்துடனும் இந்தப் பிரச்சினைகளை அணுகுவது நல்லது. மேலும் மனைவி அல்லது கணவர் இருக்கும்போது உங்களுக்கு இன்னொரு காதல் வந்தால் அது நிச்சயம் நல்ல விஷயம்தான். இதை நீங்கள் நிராகரிக்காமல் தொடர்வதால், நிச்சயம் உங்களது மனைவியிடமும் நீங்கள் கூடுதல் அன்பைக் காட்ட முடியும். உங்களது காதலையும் நீங்கள் மரித்துப் போகாமல் வாழச் செய்ய முடியும்.இதுபோன்ற சிக்கல் வரும்போது நீங்கள் இரண்டு விஷயத்தைப் பார்க்க வேண்டும். மனைவியும் முக்கியம், காதலியும் முக்கியம். காதலை மறக்க முடிவு செய்தால், அது உங்களது மனதை நிச்சயம் அரித்துக் கொண்டே இருக்கும். இதனால் மனைவியுடன் நிச்சயம் சந்தோஷமாக இருக்க முடியாது.ஒரு வேளை மனைவியை விட்டுப் பிரிய முடிவு செய்தால், அதுவும் முடியாது. காரணம், அதுவும் நிச்சயம் உங்களது மனதை அரிக்கத்தான் செய்யும். எனவே இதுபோன்ற சமயங்களில் இருவரையும் சமமாக மதித்து இருவருக்கும் சம அளவில் அன்பைப் பரி்மாறுவதே சரியான அணுகுமுறையாகும். இதனால் நீங்கள் உங்களது திருமணத்தையும் காக்க முடியும். காதலையும் வாழச் செய்ய முடியும்.ஒவ்வொருவருக்கும் ஒரு கால கட்டத்தில் உணர்வுகள் வெளிப்படும். அது திருமணத்திற்கு முன்பு வந்தால், பிரச்சினை இல்லை. ஆனால் அதன் பின்னர் வரும்போதுதான் சிக்கலாகி விடுகிறது. அதேசமயம், புத்திசாலித்தனமாகவும், நிதானமாகவும், எதார்த்தமாகவும் யோசிக்கும்போது இதை சமாளிப்பது அவ்வளவு பெரிய கஷ்டமானதல்ல என்பதை நீங்கள் உணரலாம்.... யோசித்துப் பாருங்கள் என்று கூறுகிறார் காத்தரின்.காத்தரின் இருக்கட்டும், உங்களோட கருத்து என்னங்க...?
Read more about: kamasutra
English summary
A secret romance should be a staple of British love lives, and fidelity and long-term exclusivity are like traps that make people "caged animals", a French-educated British social scientist has written in a new book. Rather than having a rigid and unforgiving opinion on affairs, Britons should learn to be more liberal with their lovers, Hakim said. The author said that a secret romance should be on a par with having dinner with your long-term partner.
Story first published: Tuesday, August 21, 2012, 14:04 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more