மனித உயிர்கள் ஒவ்வொருவருக்கும் பாலியல் உணர்வுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும். அந்த நினைவுகள்தான் பாலியல் செயல்பாடுகளில் ஆர்வத்தோடு செயல்பட வைக்கும். ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு தம்பதியர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். செக்ஸ் உணர்வுகள் எழுவதில் சிக்கல்கள் இருந்தால் இருவரும் நிதானமாக பேசி புரிந்து கொள்ளுங்கள். எதனால் இந்த சிக்கல் என்பதை பேசினால் மட்டுமே தீர்க்க முடியும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எந்த சிக்கலும் இன்றி பாலியல் உணர்வுகள் எழும். நாம் உண்ணும் உணவுக்கும், பாலியல் செயல்பாடுகளுக்கும் தொடர்பு உண்டு. எனவேதான் ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.
காமம் என்பதும் ஒரு கலைதான் அதை சிற்பமாக செதுக்குவதும், ஓவியமாக மாற்றுவதும், அவரவர் கைகளில்தான் இருக்கிறது. எனவே உணவோ, செக்ஸோ தினம் தினம் புதிது புதிதாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. எனவே அவசரப்பட்டு அள்ளித் தெளித்த கோலத்தில் செயல்படாமல் நிதானமாக மென்மையாக கையாளுங்கள். கிரியேட்டிவாக செயல்படுங்கள் தாம்பத்ய உறவில் சுவாரஸ்யம் கூடும்.
மனஅழுத்தம் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வழிகளை கண்டறிந்து அதை தீர்க்க முயலவேண்டும். மகிழ்ச்சியோடு இருங்கள் மன அழுத்தம் காணாமல் போய்விடும். தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள், அதிகாலை காற்றில் நடை பயிற்சி மேற்கொள்வது நன்மை தரும். இதனால் மனஅழுத்தம் நீங்கும். மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை நீடிக்கும். காண்டம் உபயோகிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது என்கின்றனர் நிபுணர்கள். அது பாதுகாப்பானதும் கூட என்பது பாலியல் நிபுணர்களின் ஆலோசனையாகும்.
மனக்குழப்பங்கள் இருந்தாலே மனதில் மகிழ்ச்சி இருக்காது. படுக்கை அறைக்கு செல்லும் முன்பாக உங்களின் அத்தனை டென்சனையும் படுக்கை அறையின் வெளியிலேயே விட்டுவிடுங்கள். ஏனெனில் மனதில் குழப்பம் இருந்தால் உறவில் இயல்பாக ஈடுபடமுடியாது என்கின்றனர் நிபுணர்கள். படுக்கை அறைக்குள் செல்லும் போதோ மனதை சோம்பலாக வைத்துக்கொண்டிருக்காதீர்கள். மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்களை விட்டொழியுங்கள். ஏனெனில் நெகடிவ் எண்ணங்கள்தான் உங்கள் செயல்பாடுகளை தடுக்கும்.
நேர்மறை எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள். படுக்கை அறைக்கு செல்லும் முன்பாக மது அருந்திவிட்டு செல்வது ஏற்புடையதல்ல அது கிளர்ச்சியை முடக்கிவிடும். மனைவியின் செயல்பாடுகளை குறைத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இயல்பாய் இருங்கள், அப்பொழுதுதான் உங்களுடைய தாம்பத்ய வாழ்க்கை ஆரோக்கியமானதாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.