உடல்நிலையில் கவனம்
உச்சநிலை பிரச்சினைக்கு உடல்நிலைதான் முக்கிய காரணமாக அமைகிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநேய்கள், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உடல் உறவில் ஈடுபாடு குறைந்துவிடும். இதனால் தானும் சந்தோசமடைய இயலாமல் துணைக்கும் சரியான அளவில் மகிழ்ச்சியை தரமுடியாது. இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் எளிதாய் உச்சநிலை அடைய முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
புகைப்பழக்கம் இருக்கா
ஆண்களின் ஆர்கஸப் பிரச்சினைக்கு புகைப்பழக்கம் காரணமாக கூறப்படுகிறது. உடல் உறவில் 30 வயதில் இருக்கும் வேகம் 40 வயதில் இருப்பதில்லை இதற்குக் காரணம் அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கம்தான் என்கின்றனர் நிபுணர்கள். எனவே புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் உறவில் சரியாக ஈடுபடமுடியுமாம்.
மனஅழுத்த பிரச்சினை
மனஅழுத்தம் என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரை பாதிக்கிறது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் வேலைப்பளு மட்டுமல்லாது எத்தனையோ சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுவே மனஅழுத்தத்தினை ஏற்படுத்தி படுக்கை அறையில் மகிழ்ச்சியற்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் சரியாக ஈடுபடமுடியாதல் இருவருமே ஒருவித குற்றநிலைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே மனஅழுத்தத்திற்கு காரணமாக சிக்கலை கண்டறிந்து அதனை தீர்க்க முயற்சிப்பதன் மூலம் உறவில் மகிழ்ச்சியையும், உச்சநிலையையும் அடையலாம்.
விபத்து ஏற்பட்டிருக்கா?
விபத்து உள்ளிட்ட காரணங்களினால் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலுறவில் சிக்கல்கள் எழும். அதிகதூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு இந்த சிக்கல்கள் எழும். பாலுறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும் பிரச்சினைதான். எனவே சரியாக உச்சநிலை கிடைக்கவில்லையே என்று பதற்றமடையாதீர்கள். பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து பாலியல் நிபுணர்களை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.