•  

எங்கே தொட்டால் பெண்களுக்குப் பிடிக்கும்?

Romance Tips
 
படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும். படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.



படுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான். அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.



கூந்தலை வருடுவது



பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.



கண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.



காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.



கழுத்தில் காம உணர்வு அதிகம்



கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



கைகளின் அக்குள் பகுதி



பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.



வயிற்றில் உற்சாகம்



முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.



பாதங்களில் சரணடையுங்கள்



பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.



பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.




English summary
We all know which female body parts men most frequently like to explore, but there is more to her than a vagina, breasts and butt. The largest amount of nerve endings may be packed into those areas, but she has pleasure sensors all over her body, and getting her in the mood may be as easy as stimulating some of these often-neglected parts. Incorporating touching these places into foreplay and sex, or just giving her some pleasure after a hard day, will definitely earn you some brownie points.
Story first published: Sunday, August 12, 2012, 14:58 [IST]

Get Notifications from Tamil Indiansutras