•  

அந்த நேரத்தில எதையாவது சொல்லி மாட்டிக்காதீங்க!

SpoilSport Lines Which Should be Avoided on Bed
 
படுக்கை அறையில் சந்தோசமாக உறவில் ஈடுபட்டிருக்கும் போது மயக்கமான நிலையில் உளரும் வார்த்தைகள் உறவுக்கே வேட்டு வைத்துவிடும். அதேபோல் சின்னச் சின்ன இடைஞ்சல்கள் தாம்பத்யம் என்னும் சந்தோசத்திற்கு சமாதி கட்டிவிடும். அதன்பின்னர் என்னதான் மாயாஜாலம் செய்தாலும் துணையை மூடுக்கு கொண்டு வருவது என்பது சாதாரண விசயமில்லை. தாம்பத்யத்தில் தடங்கலை ஏற்படுத்தும் காரணிகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.ஆர்வமாய் ஆரம்பித்திருப்பார்கள். உண்ட உணவு வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தும். வயிறு வலி பாடாய் படுத்தி உறவின் போது இடைஞ்சலை ஏற்படுத்திவிடும். பாதியில் நிறுத்தினால் மொத்தமும் ஸ்பாயில் ஆகிவிடும்.வயிற்றுப் பிரச்சினையினால் சிலருக்கு வாயுத் தொந்தரவு ஏற்பட்டு மொத்தத்தையும் கெடுத்துவிடும். இதனால் மூடு மொத்தமும் போய்விடும். இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற வாயுப்பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் கூறுகின்றனர்.உறவில் ஈடுபடவேண்டும் என்று விரும்புபவர்கள் இரவு நேரத்தில் வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் பெட்ரூமுக்குள் போகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.உடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது ஆண்களுக்கு சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.செக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.இதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும். மொத்த வேகமும் குறைந்து மந்த நிலை ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்க்க படுக்கை அறைக்கு போகும் முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு வந்து உறவை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.அதேபோல் மயக்கமான நிலையில் நம்மையும் அறியாமல் கேர்ள்ப்ரண்ட் அல்லது பாய்ப்ரண்ட்டின் பெயரை உளறிக்கொட்டிவிடுவார்கள். அவ்வளவுதான் வேறு வினையே வேண்டாம். தெரியாத்தனமாய் ஏதாவது பெயரைச் சொல்லப்போய் அது விவாகாரத்தில் கொண்டுபோய் விடவும் வாய்ப்புள்ளது. எனவே தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருந்தாலும் அலர்ட்டாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.செக்ஸ் உறவுக்கு இடையூறு செய்யும் சில விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப்பாருங்களேன்.
English summary
People often read about how to build the mood with their partners for sex. There are many lines which can certainly kill all the joy and could play spoil sport. People don’t realize that apart from annoying bedroom habits, extreme intimate gestures, wrong sexual positions, disliked physical attributes; there are certain unintentional things, which, if said at the wrong time, can act as libido killers.
Story first published: Thursday, August 2, 2012, 14:44 [IST]

Get Notifications from Tamil Indiansutras