•  

திருப்தியான செக்ஸுக்குப் பின் என்ன செய்யணும்?

Romance Tips
 
தம்பதியருக்கு இடையேயான தாம்பத்ய உறவு முடிந்த உடன் சிலர் குளிக்கப்போய்விடுவார்கள். இன்னும் சிலர் தூங்கப்போய்விடுவார். சில ஆண்கள் தம் அடிக்கப்போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு உறவுக்கு பிந்தைய அரவணைப்பு என்பது அவசியம் தேவைப்படுகிறதாம். உறவுக்குப்பின் என்ன செய்யவேண்டும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.



தாம்பத்ய உறவு முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். ஏனெனில் உறவின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் உறவு முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்கின்றனர்.



குளித்து முடிந்ததும் வேறு உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும். மனைவியை தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கணவன் கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.



உறவின் போது ஏற்பட்ட இனிய நிகழ்வுகளை அசைபோடலாம். திருப்தியாக இருந்ததா என்பதை ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்வது நல்லது. அறைக்குள் அடைந்து கிடக்காமல் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று காற்றாட நின்று கொண்டு அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும். உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும், இதுபோன்ற காதல்மொழி பேச்சாலும் மீண்டும் அடுத்த ரவுண்டு ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். முயற்சித்துப் பாருங்களேன்.




English summary
Sex is no longer restricted to a mind-body-spirit experience. It has turned out to be the means towards something higher, not necessarily more 'profound' but definitely more adventurous. Something like experimenting with recipes.
Story first published: Friday, July 27, 2012, 11:52 [IST]

Get Notifications from Tamil Indiansutras