•  

உங்களுக்கு நிம்போமேனியா இருக்கா.. இதைப் படிங்க முதல்ல!

Top 10 Facts About Nymphomaniacs
 
பெண்களின் பாலியல் விருப்பம் இல்லாமை என்பது ஒரு செக்ஸ் குறைபாடோ, அது போல அதிக காம உணர்வோ, எதுவென்றாலும் அது ஒரு குறைபாடு தான். பெண்களிடம் காணப்படும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை "நிம்போமேனியா" என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.செக்ஸ் உணர்வுகள் மனிதவாழ்க்கையில் பொதுவானது. ஆணோ, பெண்ணோ அனைவருக்கும் செக்ஸ் உணர்வு என்பது பொதுவானது. செக்ஸ் உணர்வு குறைவாக இருந்தாலும் பிரச்சினை. அதுவே அதிகமாக இருந்தாலும் ஆபத்து என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.அதிக செக்ஸ் ஈடுபாடு என்பது நேற்றோ இன்றோ ஏற்பட்டது அல்ல. இது பல வரலாற்று ஆய்வு ஏடுகளை புரட்டிப் பார்த்தால் பழங்காலம் தொட்டே இந்த நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள். அதிக ஆண்களை படுக்கையில் வீழ்த்திய முதல் பெண்ணாக கருதப்படுபவர் ரோம பேரரசர் அகஸ்டசின் மகள் ஜூலியா தான்.அழகு, அறிவு, படிப்பு என்று எல்லா திறமையும் இருந்த அவர் செக்ஸ் காமத்திலும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருந்தார். ரோம் நகரில் வாழும் இளைஞர்களில் இவரோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியதாம்.இரண்டாவது இடத்தில் 18-ம் நூற்றாண்டு பிரெஞ்ச் நடிகையான மெல்லி துபோய்ஸ் வருகிறார். 20 ஆண்டுகளில் தான் சந்தித்த எல்லா ஆண்களைப் பற்றிய விவரங்களையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அவரது காதலர்களின் எண்ணிக்கை 16, 527. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று ஆண்களை கட்டிலில் சந்தித்திருக்கிறார்.இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பவர் ரோம பேரரசி வலேரியா மெசலீனா. இவர் பேரரசர் கிளாடியசின் மனைவி. தொடக்கத்தில் அரசி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அரண்மனை ஊழியர்களை படுக்கைக்கு அழைத்தார். இவர் ஒரு நாளில் விலைமாது ஒருவருடன் போட்டி வைத்து ஆண்களுடன் உறவு கொண்டார். அதில் 24 மணி நேரத்தில் 25 ஆண்களுடன் உறவு கொண்டு உள்ளார்.நான்காவது இடத்தில் வருபவர் 1934 ல் புகழ்பெற்று விளங்கிய பிரெஞ்ச் நடிகை பிரிஜிட்டி பார்டட். ஒவ்வொரு இரவும் எனக்கு ஒரு புது துணை வேண்டும் என்று வெளிப்படையாகவே பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தவர். 20 வயது முதல் 40 வயது வரை இவர் சந்தித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 5 ஆயிரத்தை தாண்டியது. பண்டைய காலத்தில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பமானவர் களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்குள் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை. அதனால்தான் இப்படி பகிரங்க அறிவிப்புகளெல்லாம் சாத்தியமாயிற்று.இன்றைக்கும் நிம்போமேனியாக்கள் இருக்கின்றனர். உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.எப்பொழுதும் செக்ஸ் நினைப்பாகவே இருக்கிறதா? பகல் கனவு அதுவும் செக்ஸ் பற்றியே கனவு காண்பவரா? செக்ஸ் தொடர்பான புத்தகங்கள், கதைகள், படங்கள் அடிக்கடி பார்ப்பவரா? அதிகளவு செக்ஸ் வேட்கை காரணமாகவோ, ஆண்கள் தொட்டாலோ பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? அப்படி எனில் நீங்கள் உங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.நிம்போ மேனியா உங்களுக்கு இருக்கிறது எனில் உடல் உறவுக்குப்பின்னரும் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்குமாம். இளம் பெண்ணாக இருந்தாலும் செக்ஸ் வேட்கையால் ஒவ்வொருவரையும் கட்டி அணைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். செக்ஸ் பற்றி பேசும்போதே அதிகமாகக் கிளர்ச்சி ஏற்படுமாம். மாமூலான வேலைகளை செய்ய விடாமல் செக்ஸ் ஆர்வம் முன்னணியில் நிற்குமாம். இதுபோன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு அதி காமம் நிம்போமேனியா இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.உடலுறவின்போது எளிதில் திருப்திப்படுத்த முடியாதவர்களையும் நிம்போமேனியாக்கள் என்று சொல்லலாம். உடலியல் காரணங்களை விட உளவியலே இதற்கு முக்கியக் காரணம் ஏக்கம், தனிமையுணர்வு ஆகியவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பெண் அதிகக் காம ஆவேசம் காட்டுகிறாள் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் ஆர்வம் என்பது அபூர்வமானது. மறை விடப் பகுதியில் ஏற்படும் நமச்சல், சொறி, அரிப்பு போன்றவை தொடர் உடலுறவுக்குத் தூண்டலாம். இரத்தக் கசிவுக்கும் புற்றுநோய்க்கும் சிகிச்சைக் காகச் செலுத்தப்படும் ஹார்மோன்களின் அதிகமான உபயோகமும் அதிகப் பாலியல் எண்ணத்தை ஏற்படுத்தும். சிறுநீரகச் சுரப்பிகள், தைராய்டுச் சுரப்பிகள் ஆகியவற்றின் அதிகச் செயல்பாடு மிகுதியாலும் செக்ஸ் எண்ணம் உருவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.நிம்போமேனியாவை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். பிளாட்டினா, மூரக்ஸ், ஓரிகானம், ஸ்டாபிசாக்ரியா, அபிஸ்மெல், பிளாட்டினா, பாஸ்பரஸ், கோனியம், நேட்ரம் மூர், ஸ்டிரமோனியம், சல்பர், ஜிங்கம்மெட் போன்றவை அதிக காம உணர்வை கட்டுப்படுத்துமாம். எனவே நிம்போ மேனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதிக காம உணர்வு கட்டுப்பட்டு இயல்பான செக்ஸ் உணர்வை பெறுவார்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.English summary
A nymphomaniac is a woman who loves to have a lot of sex as often as possible. And if she is attractive and only interested in you - then life is truly a happy place!
 

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more