உணர்ச்சிகளுக்கு வடிகால் வேண்டும் என்று சுயஇன்பப்பழக்கத்தில் ஈடுபட்டால் அது திருமணத்திற்கு மனைவியுடன் சரியான அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபடமுடியாமல் போய்விடும் என்கின்றனர். எனவே பாலியல் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் போது மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
செக்ஸ் ரீதியான சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உடற்பயிற்சிகள் கைகொடுக்கும் என்று கூறும் நிபுணர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங், போன்ற உடற் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கின்றனர்.
பொதுவாக உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அளவுக்கதிகமான சூடு, வெப்பம் இருந்தாலே உணர்வுகள் வேகமாக வெளியேறிவிடும். எனவே, உணர்ச்சிகள் சூடாக இருந்தாலும், உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் தாம்பத்ய வாழ்க்கையில் சுகம் காண முடியும். அதேபோல் உணவு பழக்க வழக்கத்தையும் மாற்ற வேண்டும்.
லட்சிய வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள், தாம்பத்ய வாழ்க்கையில் சரியான வாழ்க்கைத்துணை அமையாமல் தோல்வியை அடைந்திருக்கிறார்கள். அப்படியே அமைந்தாலும், சரியான அளவில் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது ஒரு வேதனை தான் என்றாலும், முடிந்தவரை மனரீதியான பிரச்னைகளை தீர்க்க முயலவேண்டும்.
விந்து முந்துதலை தடுக்க கிரீம்கள், மருந்துகள் உள்ளன அவற்றை உபயோகிக்கலாம். உறவில் ஈடுபடும்போது உங்களின் உடலும் மனமும் சரியான அளவில் ஒன்றைப்பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும் அப்பொழுதுதான் உடனடி கிளைமேக்ஸ்சினை தடுக்க முடியும்.
இணையதளங்களிலும், டிவிடிகளிலும் பண்பாட்டை மீறிய கற்பனைக்கு அப்பாற்பட்ட உறவுகளையும் பார்த்து சலனப்படுவதால் அதிக அளவில் உணர்ச்சிகள் வெளிப்படும். தம்மால் அதுபோல இயலவில்லையே என்ற ஒருவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
காரை ஓட்டும் போது கார் ஸ்டீரிங்கை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எந்தவித விபத்தும் இல்லாமல் எப்படி செல்கிறோமோ அதைப்போல நமது உடலை நன்கு பேணி காத்து, மனநிலையை சீரான கட்டுப்பாட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் தானாக வரும். இதை அனைவரும் பின்பற்றினாலே சுகமான இல்லற சுகம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.