•  

நீண்ட இரவுதான் ஆனால் உறவுக்கு 10 நிமிடம் போதுமே!

Sex
 
திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிடம் மட்டுமே போதும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.இது தொடர்பாக செக்ஸ் தெரபி மற்றும் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த 50 பேர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் மகிழ்ச்சிகரமான செக்ஸ் உறவுக்கு வெறும் 10 நிமிடம் மட்டுமே போதும் என்று கூறியுள்ளனர்.தாம்பத்ய உறவின் போது 1 முதல் 2 நிமிடங்கள் என்பது யாருக்கும் பிரயோஜனம் இல்லாதது. மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 3 முதல் 7 நிமிடங்கள் வரை எனில் அது நார்மலான உறவு. அதே சமயம் நெட், வீடியோ போன்றவைகளில் பார்க்கப்படும் படங்களில் அதிக நேரம் உறவில் ஈடுபடுவதைப்போல காட்டுவது உங்களை சூடேற்றத்தான். அதேபோல நமக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே 10 நிமிடம் என்பது மட்டுமே உறவுக்கு ஏற்ற சரியான அளவு என்கின்றனர் நிபுணர்கள்.அதேசமயம் முத்தம், சீண்டல் போன்ற முன்விளையாட்டுக்களுக்கு நேரம் குறிப்பிடவில்லை. அது அரைமணிநேரம் வரைக்கூட நீடிக்கலாமாம்.இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி, நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டால்தான் அது சந்தோசம் என்பது கிடையாது பத்து நிமிடத்திலும் மகிழ்ச்சிகரமான உறவில் ஈடுபடமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே செக்ஸ் உறவின் உண்மையான தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.எனவே தம்பதியர் நீண்ட நேர உறவிற்கு முயற்சி செய்து தோற்றுப்போவதை விட திருப்திகரமான உறவில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவதே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.English summary
A survey of 50 members of the Society for Sex Threapy and Research, who counsel and treat couples with sexual problems, said that between one and two minutes was too short, three to seven minutes was acceptable, and anything over 13 minutes was too long. The added that sex lasting between seven and 13 minutes was "desirable".
 
Story first published: Wednesday, July 18, 2012, 13:25 [IST]

Get Notifications from Tamil Indiansutras