வெங்காய ஜூஸ் பருகினால் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் லெவல் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தினை உணவில் சேர்த்துக்கொள்வதை விட ஜூஸ் ஆக பருகினால் 300 மடங்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம்.
விலைமலிவானது வெங்காயம் ஆனால் செய்யும் செயல் மிகப்பெரியது. ஆண்களின் ஆண்மை குறைபாட்டினை நீக்க வல்லது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளன. இதில் உள்ள செலினியம் என்னும் தாது உப்பும், ஆன்டிஆக்ஸிடென்ட்சும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை அதிக அளவில் சுரக்கச் செய்கிறதாம்.
செலனியச் சத்து குறைவாக இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
ஈரானியர்கள் பெரும்பாலோனோர் ஆண்மை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தனங். அவர்களின் ஹார்மோன் சுரப்பும் குறைவாகவே இருந்துள்ளது. அவர்களுக்கு வெங்காயச்சாறு கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆச்சரியப்படத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தியது தெரியவந்தது. பின்னர் ஈரானியர்கள் தங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் ஆரோக்கியமாகவும், உற்சாகத்துடனும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக எலிகளைவைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. 8 வாரங்கள் ஆன ஆண் எலிகளை வைத்து நடைபெற்ற இந்த சோதனையில் 20 நாட்களுக்கு சாதாரண உணவு கொடுக்கப்பட்டது. மற்றொரு பத்து எலிகளுக்கு 5 கிராம் வெங்காயம் சேர்த்து கொடுக்கப்பட்டது. வெங்காய ஜூஸ் டியூப் மூலம் குடிக்கக் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் வெங்காய ஜூஸ் குடித்த எலிகளுக்கு விந்தணு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. அவற்றின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பும் அதிகமாக இருந்ததாம்.
எகித்தியர்களும், ஈரானியர்களும் 1967 ஆம் ஆண்டிலிருந்தே தங்களின் செக்ஸ் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க வெங்காய ஜூஸ் குடித்து வந்திருக்கின்றனர் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் கிளர்ச்சி நிலையில் அதிக அளவில் மாற்றம் தெரிந்ததாகவும் ஆய்வாளர்கள். தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டுரையை படித்துவிட்டு வெங்காயத்தை வாங்குபவர்கள் அதிகரித்தாலோ, வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ஆனாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.