•  

சரியான கிளைமேக்ஸ்தான் மகிழ்ச்சியின் அடிப்படை!

Romance Tips
 
தாம்பத்ய உறவிற்காக ஏன் இத்தனை போராட்டம். மனித இனம் மட்டுமல்லாது ஒவ்வொரு உயிரினமும் செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் எனப்படும் அந்த இனம்புரியாத மகிழ்ச்சிக்காகத்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சின்ன எறும்பில் இருந்தில் இருந்து 6 அறிவு படைத்த மனிதர்கள் வரை உறவின்போது ஏற்படும் உச்சக்கட்டம் என்பது முக்கியம்.



உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்படம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.



உச்சக்கட்ட நிகழ்வை ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.



சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. ஒவ்வொரு உயிரினமும் இதற்காக மெனக்கெடுவதை வைத்தே இதன் மகிமையை புரிந்துகொள்ளலாம். அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும்.



உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப்படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்களின் பங்கேற்பு மட்டுமே முக்கியமல்ல. சுய இன்பத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது கூட இயற்கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலை வேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை.



சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.



பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.



அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வுமுடிவில் தெரியவந்துள்ளது.




English summary
Most men can only have one type of orgasm … after which they usually lose their erection temporarily before they can get hard and have another. Women however, can have Many different types of orgasms.
Story first published: Friday, July 27, 2012, 10:38 [IST]

Get Notifications from Tamil Indiansutras