•  

நடுத்தரவயதில்தான் பெண்களுக்கு ஆசை அதிகம் வருமாம்!

Middle aged Women
 
20 வயது பெண்களை விட 35 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்களுக்குத்தான் செக்ஸ் ஆசை அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



திருமணமான புதிதில் பெண்ணுக்கு கூச்சம் அதிகம் இருப்பதனாலும், தவறாக நினைத்துவிடுவானோ என்ற அச்ச உணர்வினாலும் இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்கள்தான் முதலில் நிற்கின்றனர். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.



சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.



இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் ஆண் உறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறன்



வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.



English summary
Studies show that Women ages 27 to 45 are having more sex than those that are older and younger. The Women 18 to 26 are having less sex. But even the single middle aged Women are doing it even more.
 
Story first published: Saturday, July 28, 2012, 12:30 [IST]

Get Notifications from Tamil Indiansutras