•  

முத்தமிடுங்கள், உடல்ரீசார்ஜ் ஆகும்!

Love
 
முத்தம் என்ற வார்த்தையை முன்பெல்லாம் பேசுவதற்குக்கூட அச்சப்பட்டனர். இன்றைக்கு அன்பின் வெளிப்பாடாக முத்தம்தான் திகழ்கிறது. முத்தம் என்பது ஆன்மாக்களின் சங்கமம். முத்தமிடுவதன் மூலம் இறுகலான முகத்தசைகள் இளகுகின்றனவாம். முத்தம் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற முத்த ஆராய்ச்சி சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளது.பலமான உறவுதம்பதிகள் இடையேயான தாம்பத்ய உறவு பலமாக இருப்பதற்கு அவர்களு க்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண் டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமா ன உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் இணை உடனான வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். தங்களது அன்பையும், மகிழ்ச்சி யையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.மனைவியின் முத்தம்முத்தம் என்னும் இன்பக்கடலில் மூழ்கி அந்த இன்பத்தை அணு அணுவாய் ரசிப்பதிலும் பெண்கள்தான் டாப். முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாகவே முத்தத்தை கருதுகிறார்களாம்.புத்துணர்வு தரும்ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் ஆண்களுக்கு சலித்துப் போய்விடுகிறதாம். திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாம் வெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால் , அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.திருப்தியான உறவுசெக்ஸ் உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்த மிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக்கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். செக்ஸ் உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறை வை அவள் பெறுகிறாளாம். இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்கள் முத்தம் பற்றிய ஆய்வில் தெரியவந்துள்ளது.English summary
Men like to push to make kisses sloppier, while women want to keep them long, suggest a new study. Also, a kiss shared between a man and a woman seems more like a clash of spirits than a meeting of souls.
Story first published: Tuesday, July 17, 2012, 11:50 [IST]

Get Notifications from Tamil Indiansutras