•  

செக்ஸ் உறவில் கொலம்பியர்கள் கில்லாடிகள்: சர்வே தகவல்

Sex
 
உலக அளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில் இவர்கள்தான் உறவு வைத்துக் கொள்கின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேசமயம் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.உலகம் முழுவதும் செக்ஸ் ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுகளைச்சேர்ந்த 30000 இளசுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.உலகிலேயே கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில் இவர்கள்தான் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உறவு கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதில் 2வது இடத்தில் இந்தோனேசியாவும், ரஷ்யாவும் உள்ளன.உறவின் போது எட்டப்படும் உச்சகட்டமான ஆர்கஸத்தை அடைவதில் ஹங்கேரியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அதாவது 75 சதவீதம் பேருக்கு அருமையான ஆர்கஸம் ஏற்படுகிறதாம். 2வது இடத்தில் கிரேக்கர்கள் உள்ளனர். 3வது இடம் ஸ்பெயின் நாட்டவருக்கு கிடைத்துள்ளது.உறவின்போது செய்யும் முன் விளையாட்டுக்களுக்கு நேரம் செலவிடும் விஷயத்தில் இந்தியர்கள் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளனர். அதாவது 19.3 நிமிடங்கள் அளவுக்கு முன்விளையாட்டுக்களில் இந்தியர்கள் ஈடுபடுகின்றனராம். அதேசமயம் உடல் உறவுக்கு இந்தியர்கள் எடுத்துக் கொள்ளம் நேரம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாம். அதாவது சராசரியாக 15.1 நிமிடங்களே இந்தியர்கள் இதற்காக எடுத்துக் கொள்கின்றனராம்.உலக அளவில் பாதுகாப்பான உறவைக் கடைப்பிடிப்பதில் முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 77 சதவீதம் பேர் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஹாங்காங் 73 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆணுறைகள் பயன்பாட்டில் உலக நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளதாம். இந்தியாவில் 71 சதவீதம் பேர் உடல் உறவின்போது ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்களாம். இந்த ஆய்வு முடிவு பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.English summary
Colombians have most sex, with 89 per cent making love at least once a week. Indonesians and Russians are joint second on 88 per cent.
 
Story first published: Wednesday, July 25, 2012, 16:54 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more