தம்பதியர் தினம் தினம் ஸ்பரிசத்தால் ஒருவருக்கொருவர் அன்பை உணர்த்தவேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பத்து வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தும் அன்பினை ஒரு முத்தத்தினாலோ, சின்ன ஸ்பரிசத்தினாலோ வெளிப்படுத்திவிடலாம் என்கின்றனர்.
மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனித உணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. மனித இனத்தில் ஆண்-பெண் என இரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையான பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.இது அறிவியல் பூர்வமான உண்மை என்று பல உளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.
பாலுணர்வு வெளிப்படும் நேரத்தில் ஆரோக்கியமான தாம்பத்ய உறவில் ஈடுபடுவது தம்பதியருக்கு முழு இன்பம் கிடைக்கும். ஆண்-பெண் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது இருவரது உடல் முழுவதும் பாலுணர்வுகள் மையம் கொண்டுவிடும். அந்த நொடிப் பொழுதில் இரண்டு மனங்களும் புற சூழ் நிலையை மறந்து ஒன்றுபட்டு விடுகிறது. இருவரது இதய துடிப்பும் ஒன்றுபட்டு ஒலிக்கும். இருவரது சுவாசமும் ஒன்றாகி விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த நிலைதான் ஆண்-பெண் என இரு உயிர்கள் இணைந்து ஒரு உயிராகும் நிலை. இந்த நிலையின்போது ஆண்-பெண் இருபால ரும், ஒரு சேர பெறுகின்ற ஸ்பரிச உணர்வானது, மலர்கள் நம் மீது படுகின்றபோது ஏற்படுத்துகின்ற ஸ்பரிசத்தைவிட மிகவும் மென்மையானது. இதனை கருத்தில் கொண்டுதான் ‘மலரினும் மெல்லியது காமம்' என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த மென்மையான ஸ்பரிசத்தை பெறுகின்றபோதுதான், ஆண்-பெண் இருவரிடத்திலும் உள்ள பாலுணர்வுகள் மறைந்து, பாச உணர்வுகள் ஊற்றெடுக்கும் என்கின்றனர்.
இதனால் தம்பரியரிடத்திலே வன்முறை உணர்வுகள் குறைந்து, மனதிலே அன்பு வீச தொடங்கிவிடும். இந்த அன்பு தெய்வீகமானது. இதனால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மன பக்குவத்தை பெற்றுவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் ஸ்பரிசத்தின் மூலம் அன்பான இல்லற வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளலாம்.