•  

30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்!

How passion vanishes in your 30s
 
பொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் திருப்தியற்ற வாழ்க்கை வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.செக்ஸ்க்கு ஏற்ற வயது 50 என்று அந்த செக்ஸ் சென்செஸ் தெரிவித்துள்ளது. முப்பது வயதை கடந்துள்ள ஆணோ, பெண்ணோ மன அழுத்தம், பொருளாதார சிக்கல், குழந்தைபிறப்பு, போன்ற காரணங்களினால் படுக்கை அறையில் போராடத்தான் வேண்டியிருக்கிறாதாம். இந்த சிக்கல்கள் எல்லாம் ஓய்ந்து ஒரளவு நிம்மதியான சூழலில் 50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே சந்தோஷமாக தன்னம்பிக்கையுடன் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.2012 ம் ஆண்டிற்காக செக்ஸ் சென்செஸ் ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 25000 பேர் பங்கேற்ற இந்த கணக்கெடுப்பில் 30 முதல் 39 வயதுவரை வசிக்கும் ஆண், பெண்கள் தாங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.பெண்கள் குழந்தை பெறுவதற்கும், வளர்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். உடல்நிலை ஒத்துழைக்காமை, சோர்வு போன்றவைகளினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், இதனால் தாம்பத்ய உறவில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.அதேசமயம் 50 முதல் 59 வயதுவரை உடைய 52 சதவிகிதம் பேர் இந்த வயதில் தங்களால் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவில் ஈடுபட முடிகிறது என்று கூறியுள்ளனர். ஆனால் 5 சதவிகிதம் பேர் மட்டும் இந்த வயதில் தங்களால் ஈடுபாட்டுடன் செயல்பட முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.மேலும் 60 முதல் 69 வயது வரை உடைய மூத்த குடிமக்கள் தங்களால் செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடிவதாக பத்தில் ஆறுபேர் கூறியுள்ளனர். இந்த கணக்கெடுப்பினை Ann Summers shop என்ற சேவை நிறுவனம் ஒன்று மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.செக்ஸ் என்பது மனித வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம். அது தம்பதியர்களுக்கு இடையேயான அந்நியோன்னியமான மொழி எனவேதான் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மன அழுத்தம் நீங்கி மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் உணர்த்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.English summary
The Sex Census 2012, which involved almost 25,000 respondents, suggests that 25 per cent of those aged 30 to 39 are unhappy with their sex lives owing to money worries and the demands of modern life.
Story first published: Wednesday, July 4, 2012, 13:47 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more