•  

பாலுணர்வை குறைக்கும் உணவுகள்: நிபுணர்கள் தகவல்

Foods That Decrease Libido
 
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும்.சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.சோயா பால்பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் "டோஃபு". சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும்.பெருஞ்சீரகம்மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் சிலர் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவார்கள். இனிப்பு சோம்புவை அதிகம் சாப்பிடுவார்கள். இதுவும் பாலுணர்வு சக்தியை குறைக்குமாம். ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரோன் அளவை குறைக்கும் சக்தி சோம்புக்கு உண்டு என்கின்றனர் நிபுணர்கள்.கான்ஃப்ளேக்ஸ்தினசரி கான்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் அது நேரடி பாதிப்பை ஏற்படுத்துமாம். இது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பினை குறைத்து விடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். கான்ஃப்ளேக்ஸ் உணவை அறிமுகப்படுத்திய கெல்லாக் இது ஆண்களின் பாலுணர்வு சக்தியை குறைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இது சிறந்த டயட் உணவு என்றும் அதீத பாலியல் உணர்வை கட்டுப்படுத்தக்கூடிய உணவு என்றும் அவர் கூறியுள்ளார்.ஆல்கஹால்ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் பின்விளைவினால் அதிக தலைவலி, தலைசுத்தல், எரிச்சல் போன்றவைகளினால் காதல் உணர்வுகள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம். ஆனால் குறைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
A decrease in libido can cause problems in marital life of couples. Most people are not willing to talk about it as it hurts their ego. But all libido problems are not due to serious physical problems. Do you know that some foods that you eat at home may decrease your libido? They effect your desire of making love with your partner to a great extent.
Story first published: Tuesday, July 3, 2012, 10:38 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more