•  

வானத்திலும் பாயப் போகும் இங்கிலாந்து செக்ஸ் புத்தகம்!

Fifty Shades of Grey to take to the skies!
 
இங்கிலாந்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் Fifty Shades of Grey என்ற போர்னோகிராபி புத்தகத்தின் ஆடியோ வடிவத்தை விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாம். இதனால் வானத்தில் பறந்தபடி இந்த நூலை உணரும் வாய்ப்பு பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்குக் கிடைத்துள்ளது.இங்கிலாந்துப் பெண்களிடம் கையில் ஹேன்ட் பேக் இருக்கிறதோ இல்லையோ இப்போது பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூலை மட்டும் மறக்காமல் வைத்திருக்கின்றனர். அந்த அளவுக்கு காட்டுத்தனமாக பரவி விட்டது எல் ஜேம்ஸ் எழுதிய இந்த நூல். பெண்களின் செக்ஸ் வேட்கை குறித்து படம் உள்ளிட்டவற்றுடன் விளக்கியுள்ளார் ஜேம்ஸ் இந்த நூலில். இங்கிலாந்தில் இதுவரை நிகழ்த்தப்பட்ட புத்தக விற்பனை சாதனைகளை இந்த நூல் தகர்த்தெறிந்து விட்டது.இப்போது இந்த புத்தகம் விண்ணுக்கும் செல்கிறது. அதாவது விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் இப்புத்தகத்தின் ஆடியோ வடிவத்தை தனது பயணிகளுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாம்.அதேசமயம், இந்த ஆடியோ புத்தகத்தைக் கேட்கும் யாராவது தூண்டப்பட்டு எசகு பிசகாக நடந்தால் அதற்கு தங்களது நிறுவனம் பொறுப்பல்ல என்றும் சாமர்த்தியாக கூறியுள்ளது விர்ஜின் நிறுவனம்.கடந்த ஜூன் மாதம்தான் இந்த நூல் வெளியானது. இதுவரை உலகம் முழுவதும் 2 கோடி நூல்கள் விற்று சாதனை படைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்தில் மட்டும் இந்தப் புத்தகத்திற்கு இதுவரை 17 முறை பிரின்ட் போட்டு விட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.விமானத்தில் இதன் ஆடியோ வடிவத்தை பயன்படுத்துவது குறித்து அந்த நிறுவனத்தின் பிஆர் தலைவர் பே பர்கின் கூறுகையில், பொது இடங்களில் இந்த புத்தகத்தை வைத்துப் படிப்பதற்கு பெண்களுக்கு சங்கோஜம் ஏற்படலாம். எனவேதான் இதன் ஆடியோ வடிவத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இதனால் எங்களது பெண் பயணிகள் தங்களது பயணத்தை சுவாரஸ்யமாக அனுபவிக்க முடியும் என்றார்.பார்த்துக் கேளுங்க, பார்த்துப் பயணியுங்க...!English summary
It is no surprise that Fifty Shades of Grey has become a top-selling e-book - as millions of devotees chose to download the erotic hit to spare their blushes. And soon there will be another way to take in the tale of Anastasia Steele and Christian Grey as Virgin Atlantic plan to make the controversial Fifty Shades of Grey available as an audio book during flights.
 
Story first published: Monday, July 16, 2012, 17:33 [IST]

Get Notifications from Tamil Indiansutras