•  

திருப்தி இல்லையே... சீனப் பெண்களின் 'செக்ஸ்' புலம்பல்!

Chinese
 
சீனாவில் 70 சதவிகிதம் பேர் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தம், மனதில் நிம்மதியின்மை போன்றவையே அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போவது தெரியவந்துள்ளது.திருமணமான தம்பதியர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கையே சூனியமாகிவிடும். சீனாவில் 70 சதவிகிதம் பேரின் வாழ்க்கை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறதாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.பல துறைகளில் நாட்டம் செலுத்தி, முன்னேறி வரும் சீனார்கள் செக்ஸ் விஷயத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். மேற்கத்திய நாடுகளை விட சீனாவில் உள்ளவர்கள்தான் செக்ஸில் அதிகம் ஈடுபடுகின்றனராம். அதனால் தான் அங்கு ஜனத்தொகையும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஆனாலும், நீடித்த செக்ஸ் வாழ்க்கையில் சீனர்களுக்கு குறை இருக்கிறது என்பது இப்போது தான் மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.செக்சை பொறுத்தவரை, சீனப்பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் கணவர்களால் செக்ஸ் பிரச்னை இருக்கிறது. போதுமான அளவில் திருப்தி இல்லாமல் தான் திருமண வாழ்க்கையில் தாம்பத்ய உறவை அனுபவிக்கின்றனர்.சீன மருத்துவ சங்கமும், சீன செக்ஸ் அறிவியல் கழகமும் இணைந்து சமீபத்தில் வித்தியாசமான சர்வே எடுத்தது. அதில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்வே எடுத்ததில் 54.2 சதவீதம் பெண்களுக்கு, திருமணத்துக்குப் பின்னர் செக்ஸ் என்பது பெரிதும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அது நிச்சயம், முழுமையாக தேவை என்றும் கருதுகின்றனர். அதில் 25 சதவீதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.பழங்கால சீனாவை பொறுத்தவரை, ரொம்பவும் கட்டுப்பட்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். செக்ஸ் விஷயத்தில் கூட, அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்துள்ளனர். இப்போது சீனப் பெண்களின் செக்ஸ் தாகம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. அவர்களின் செக்ஸ் தாகத்தை தீர்க்கும் அளவுக்கு பெரும்பாலான சீன ஆண்களால் முடியவில்லை என்று கூறுகிறது.சீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக செக்ஸ் விஷயத்தில் இருப்பதும் அவர்களை திகைப்படையச் செய்துள்ளது. செக்ஸ் விஷயத்தில் உரிய அணுகுமுறைகளை கையாள, கணவன்மார்களுக்கு ஆலோசனையும் கூறலாம் என்றும் செக்ஸ் மருத்துவக் கழகம் யோசித்து வருகிறது. இது பற்றி சீன செக்ஸ் மருத்துவ கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் சர்வே எடுத்து, சீன தம்பதிகளின் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேற்கத்திய கலாச்சார பாதிப்பு இருக்கும் நிலையில், சீனர்கள் மனப்போக்கு மாறியிருக்கும் அளவுக்கு, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பது என்பது மருத்துவ உலகில் புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English summary
About 70 percent of Chinese men are dissatisfied with their sex lives, with long-term work pressures and mental stress considered the greatest threat to men's health, a survey shows. An investigative report to determine the sexual happiness index of Chinese men was released in Beijing on Saturday.
Story first published: Sunday, July 1, 2012, 10:51 [IST]

Get Notifications from Tamil Indiansutras