•  

'மூடு' நல்லாருக்கான்னு பார்த்துட்டு முன்னேறுங்க..!

Sex
 
தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூடு'. சரியான மூடில் இல்லாவிட்டால் செக்ஸ் வாழ்ககை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக்கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பதும் ரொம்பவே முக்கியமானது. எனவே இரவாகி விட்டாலே, நம்மாளு நல்ல மூடில் இருக்காங்களா என்று அறிந்து கொள்வதில் கணவனும் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள்.சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. வழக்கம் போல சில டிப்ஸ் தர்றோம், படிச்சுப் பார்த்து பயன் பெறுங்க..மனைவி கோபமா இருக்காங்களா... சில நேரங்களில் மனைவி கொஞ்சம் கோபமாக இருக்கலாம். உங்கள் மீது கோபமாக இருக்கலாம், பிள்ளைகள் மீது கோபத்தைக் காட்டலாம், வீ்ட்டில் உள்ளவர்கள் மீது கோபமாக இருக்கலாம். யார் மீது என்ன கோபமாக இருந்தாலும், கண்டிப்பாக அது உங்களது தலையில்தான் வந்து விடியும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே மனைவியை சமாதானப்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களைத்தான் சேரும். எனவே வேலைகளை முடித்து விட்டு சேலையை உதறி விட்டபடி வந்து அமரும் மனைவியியடம் மென்மையாகப் பேசி, முடிந்தால், கை கால்களை அமுக்கி விட்டு, நெற்றியைப் பிடித்து விட்டு, லேசாக முத்தமிட்டு கோபத்தைக் குறைத்து குளுமைக்குக் கொண்டு வாருங்கள்.ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். மடியி்ல படுக்க வைத்துக் கொள்ளுங்கள், உடம்பெல்லாம் பிடித்து விடுங்கள். அந்த கவனிப்பில் உங்க மனைவி மெதுவாக கரைந்து போய் உங்கள் பக்கம் நகர்ந்து வருவார். பிறகென்ன...அப்செட்டாக இருக்கிறாரா... சில நேரங்களில் ஏதாவது காரணத்திற்காக மனைவி அப்செட்டாக இருக்கலாம். ஆபீஸில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம், குடும்பப் பிரச்சினையால் அப்செட்டாக இருக்கலாம். இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம். முதலில் அனுசரணையாக அமர வைத்து ஆற அமரப் பேசுங்கள். உங்களால் முடிந்த தீர்வுகளைப் பரிந்துரையுங்கள். முடிந்தவரை அவருக்குப் பிடித்தமான, உடன்பாடான முறையில் தீர்வைச் சொல்லுங்கள். அவருக்கும் மனசு லேசாகும், உங்களைப் பார்த்துப் புன்னகைப்பார், புரிந்து கொண்டு ஆரத் தழுவுவார்.நல்ல மூடில் இருக்கிறாரா... சில நேரங்களில் மனைவி மகிழ்ச்சியான மூடில் இருப்பார். அதேசமயம், செக்ஸுக்கான மூடில் இருக்கிறாரா என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே செக்ஸ் விளையாட்டின் முதல் படி என்பதைப் புரிந்து கொள்க. எனவே அவருடன் சேர்ந்து நீங்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். அப்படியே லேசு பாசாக முன் விளையாட்டுக்களை ஆரம்பியுங்கள். சின்னச் சின்னதாக ரொமான்ஸ் செய்யுங்கள். கன்னத்தைக் கிள்ளுங்கள், இடுப்பைப் பிடித்துக் கிள்ளுங்கள், உதட்டைப் பிடித்து விளையாடுங்கள், முத்தமிடுங்கள், அருகில் இழுத்துக் கொண்டு ஆரத் தழுவுங்கள்.. இப்படியே உங்கள் பக்கம் அவரை ஈர்த்து தொடருங்கள்...ரிலாக்ஸ் ஆக இருக்கிறாரா... சில நேரம் மனைவிக்கு வீட்டில் வேலை அதிகமாக இருந்திருக்கும். எல்லா வேலையையும் முடித்து விட்டு ஆய்ந்து ஓய்ந்து வந்து அப்பாடா என்று படுக்கையில் விழுவார். அப்போது போய், வா, என்று கூப்பிட்டு உறவுக்கு அழைத்தால் அது நிச்சயம் மனிதாபிமானம் இல்லை. எனவே அவரை நல்ல மூடுக்கு மாற்றி, உடலையும், மனதையும் தகுதிப்படுத்திய பின்னரே உறவுக்கு முயலலாம்.இப்படிப்பட்ட நிலையில் முதலில் மனைவியை ஈஸியாக படுக்கச் சொல்லி விட்டு மசாஜ் செய்து விடுங்கள். முதுகை அமுக்கி விடலாம். கை, கால்களில் சொடுக்கு எடுத்து பாதங்களைப் பிடித்து விடலாம். தலையில் தைலம் தடவி விட்டு அவரின் தலை பாரத்தை சுமூகமாக்கலாம். தேவைப்பட்டால் வெந்நீர் வைத்து இதமான சூட்டில் இருக்கும்போது மனைவிக்கு நீங்களே குளிப்பாட்டி விடலாம். இது உறவுக்கு உடம்பை சூப்பராக தயாராக்கும்.இப்படிச் செய்யும்போது செக்ஸுக்காகத்தான் இதைச் செய்கிறாரோ என்று மனைவி நினைத்து விடாத அளவுக்கு நீங்கள் உண்மையாகவே செய்ய வேண்டும். அதாவது பாசத்தையும், காதலையும் அள்ளிக் கொட்ட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உங்களது மனைவியும் மன பாரத்தை இறக்கி வைத்து விட்டு மெல்ல உங்கள் பக்கம் சாய்வார்.இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய இருக்கிறது. கடைப்பிடியுங்கள், கைப்பிடியுங்கள், கலந்து மகிழுங்கள்...!
English summary
Mood swings is a common trouble for couples. Often couples end up in a bitter fight due to mood swings and change of emotions. What happens when you approach an angry woman? She will yell at you and you two end up sleeping turning your back to each other. You think you did the right thing by trying to change her angry mood through sex but, things turn out differently. Depending on the mood and how a woman is feeling, you should try these things to initiate sex.
Story first published: Monday, July 30, 2012, 17:36 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more