•  

ஓரினச் சேர்க்கையாளர்களால் அதிகமாக பரவும் பால்வினை நோய்கள்

Homosexual Men
 
ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை' நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது.‘ஓரினச்சேர்க்கை'யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குறிப்பாக, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ‘ஓரினசேர்க்கை'யில் ஈடுபடுவோரிடையே, இதே நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமான ‘ஆண்-பெண்' உடலுறவை மேற்கொள்ளும் மக்களைவிட பல மடங்கு அதிகமாக பாதிப்புள்ளது. இந்த புதிய ‘சிக்மா எயிட்ஸ் ஆய்வு குழுமத்தின்' ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்' எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை' பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையாளர்களால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இதுபோன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்சேர்க்கையால்' எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்' குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன.லத்தீன் அமெரிக்காவில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக ‘ஓரினச்சேர்க்கை' விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்' தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை' மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளில் ‘ஓரினச்சேர்க்கையாளர்களிடையே' பரவும் எய்ட்ஸ் நோய் தாக்கம் மிக கடுமையாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நாடுகளில் ஓரினச்சேர்க்கையாலர்களால் மறைமுகமாக, எய்ட்ஸ் நோய் தொற்றிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 10% முதல் 25% சதவீதமாக உள்ளது என்பதேயாகும். ‘ஓரினச்சேர்க்கையாளர்களை‘ திருமணம் செய்து கொண்டதால், எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளனர் என இந்த ‘சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழுமத்தின்' ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
English summary
An official with the Centers for Disease Control and Prevention (CDC) announced the CDC's estimate Monday that in the United States AIDS is fifty times more prevalent among men who have sex with men ('MSM') than the rest of the population. Dr. Amy Lansky revealed this statistic during a plenary session at the 2009 HIV Prevention Conference in Atlanta.
Story first published: Monday, July 16, 2012, 15:01 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more