•  

திருமணத்திற்கு முன் செக்ஸ் உறவு சீனாவில் அதிகம்: ஆய்வில் தகவல்

70 percent Chinese have pre-marital sex
 
சீனாவில் திருமணத்திற்கு முன் 70 சதவிகிதம் பேர் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. செக்ஸ் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே அதற்கு காரணம் என்று சீனர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது சாதாரணமானது. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் இன்றைக்கும் சில கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அதை எல்லாம் உடைத்து தூளாக்குவதைப்போல சீனாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் சீன இளைஞர்கள் பதிலளித்துள்ளனர்.'சீனா மக்களின் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை' என்ற தலைப்பில் சீனா பத்திரிக்கை ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இதில் 20000 பேர் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். 1,013 பேரிடம் நேரடியாக கேள்வி கேட்கப்பட்டது. 24 முதல் 39 வயதுடைய நபர்கள் இந்த சர்வேயில் பங்கேற்றனர் அதில் 64 சதவிகிதம் பேர் பட்டதாரிகள். திருமணத்திற்கு முன்னதாகவே செக்ஸ் பற்றியும், அதைப்பற்றிய விசயங்களை அறிந்து கொள்ளவும் பலர் ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளனர்.சீனாவில் ஆண்களுக்கு 22 வயதும் பெண்களுக்கு 20 வயதும் திருமணத்திற்கு உகந்தது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் 70 சதவிகிதம் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் எந்த விதமான பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள்.அதேபோல் 9 சதவிகிதத்திற்கும் குறைவான நபர்கள் பள்ளிகளிலேயே செக்ஸ் பற்றி பேசி தெளிவுபடுத்திக்கொள்வதாக கூறியுள்ளனர். அதேபோல் 1.5 சதவிகிதம் பேர் பாலியல் பற்றி தங்களின் பெற்றோர்களிடம் பேசி தெளிவு படுத்திக்கொள்வதாக கூறியுள்ளனர். சீனாவில் பெரும்பாலோனோர் இணையதளங்களின் வாயிலாக செக்ஸ் பற்றி அறிந்து கொள்வதாக கூறியுள்ளனர்.சீன நாட்டில் 1989 ம் ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 15 சதவிகிதம் பேர் திருமணத்திற்கு முந்தைய உறவில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். அதேசமயம் 1994ம் ஆண்டு 40 சதவிகிதம் பேர் திருமணத்திற்கு முந்தைய உறவினை விரும்புபவதாக கூறியுள்ளனர் என்று பிரபல பாலியல் நிபுணர் Li Yinhe கூறியுள்ளார்.இன்னும் சில ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளைப்போல சீனாவும் மாறிவிடும் வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வினை மேற்கொணட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். திருமணத்திற்கு முன் சீனப்பெண்கள் தங்களின் கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.சீனாவிலேயே இப்படி என்றால் இந்தியாவில் சர்வே எடுத்தால் எந்த அளவிற்கு தகவல் தெரியவருமோ?English summary
Chinese people are showing an increasingly tolerant attitude toward pre-marital sex, with over 70 percent saying they now getting physical before tying the knot, a survey has found.
 
Story first published: Sunday, July 15, 2012, 16:04 [IST]

Get Notifications from Tamil Indiansutras