முத்தத்தில் தொடங்குங்கள்
தாம்பத்ய உறவிற்கான முதல் திறவுகோல் முத்தம் எதையுமே இதழில் தொடங்கினால் உறவிற்கான அடித்தளம் அமோகமாய் அமையுமாம். எனவே முத்தமிடுவதில் கூட ஒரு கலை நயம் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மென்மையான உதட்டில் பதிக்கும் முத்தம் ஆணுக்கும், பெண்ணுக்கும் உணர்ச்சிகளை தூண்டி கிளர்ச்சியை ஏற்படுத்தும்.
முன்விளையாட்டு முக்கியம்
முன்விளையாட்டுக்களில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அவர்களின் உணர்வுகள் தூண்டப்படுவதோடு ஆர்க்கஸம் நன்றாக இருக்குமாம். பெண்களை குஷிபடுத்துவதற்கு ஏற்ற சின்னச் சின்ன டெக்னிக்குகள் அடங்கிய முன் விளையாட்டுக்களை அறிந்து கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
காண்டம் விழிப்புணர்வு
ஆணோ, பெண்ணோ செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்கவேண்டும். ஆரோக்கியமான தாம்பத்யத்திற்கு காண்டம் உபயோகிப்பது அவசியம் என்கின்றனர். அது எஸ்டிடி எனப்படும் (Sexually Transmitted Diseases) பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே காண்டம் எவ்வாறு உபயோகிப்பது என்ற அடிப்படை அறிவு ஆண்களுக்கு அவசியம் இருக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
பொசிசன் தெரிந்து கொள்ளுங்கள்
காமத்திற்கு ஏற்ற நிலையினை காமசூத்ரா கூறியுள்ளது. சில பொஸிசன்கள் மட்டுமே நமக்கு ஏற்றதாக இருக்கும் அதைப்பற்றி தெரிந்துகொண்டால் தாம்பத்ய உறவின் துணையினை திருப்திபடுத்தமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பதற்றமடையாதீர்கள்
எந்த ஒரு செயலுமே பதற்றத்தினால் கெட்டுப்போய்விடும். எனவே பதற்றமடையாமல் செக்ஸை தொடங்கினால் அதுவே பாதி வெற்றி என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியரில் ஒருவருக்கு பதற்றமான சூழ்நிலை இருந்தாலும் அன்றைய தினம் செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
கட்டுப்படுத்துங்கள்
ஒரு சில ஆண்களுக்கு எளிதில் உச்சக்கட்டநிலை வந்துவிடும். திடீர் விந்து வெளியேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாது. இதனால் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். எனவே உங்களை கட்டுப்படுத்துவதுற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் சில நிமிட நேரங்கள் சந்தோசமான தாம்பத்யத்தினை அனுபவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
கட்டாயப்படுத்தவேண்டாம்
தாம்பத்ய உறவு என்பது இருமனங்களும் இணைந்து ஈடுபடவேண்டிய ஒரு செயல் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகஜமான மனநிலையில் செக்ஸ் உறவில் ஈடுபடவேண்டும். பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் ஒருவித கூச்ச சுபாவத்தினால் சிறிது நேரம் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அந்த மாதிரியான நேரத்தில் சிறிதுநேரம் பேசி அவர்களுக்கு மூடுவரவழைக்கலாம். தம்பதியர்களில் யாருக்காவது மூடு சரியில்லாமல் இருந்தாலோ, மற்றொருநாள் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றினாலோ சரி என்று கேட்டுக்கொள்ளவேண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவின் போது நிபுணர்கள் கூறியுள்ள இந்த அடிப்படை நிபந்தனைகளை பின்பற்றினால் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையினை அனுபவிக்கமுடியும் என்கின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப்பாருங்களேன்.