•  

'டைட்'டான ஜட்டி போடுவதைத் தவிர்த்தால் உறவு சுகப்படும்!

6 Ways to get a stronger erection
 
மனைவியை சரி வர திருப்திப்படுத்த முடியவில்லையே என்று சிலர் விசனப்படலாம். இந்தப் பிரச்சினை நிறையப் பேரிடம் உள்ளது. ஆனால் இது பெரும் கவலைக்குரிய விஷயமல்ல. மாறாக, சில பயனுள்ள வழிமுறைகளைக் கையாண்டால், வலுவான, நீண்டநேர உறவுக்கு வழி காண முடியும்.இப்படிப்பட்ட பிரச்சினை உடையவர்கள் அவமானப்படவோ, வெட்கப்படவோ, வேதனைப்படவோ எதுவும் இல்லை. எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது. அதேசமயம், இப்படிப்பட்ட பிரச்சினை வந்து விட்டால் உடனே சுதாரித்துக் கொண்டு சிக்கலைத் தீர்க்கும் வழிகளைப் பார்க்க வேண்டும்.அதற்கு சில யோசனைகள் ...நன்கு சாப்பிடுங்கள்... நன்கு சாப்பிடுவது முதல் முக்கிய யோசனை. ஆரோக்கியமானதாக, சத்துள்ளதாக சாப்பாடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம், முட்டை, நிலக்கடலை போன்றவை, வெங்காயம், ஒயின் போன்றவை செக்ஸ் சக்தியை கூட்டும் வல்லமை படைத்தவை. அதேசமயம், ஜங்க் உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது.ஆண்குறிக்கு பயிற்சி கொடுங்கள்... ஆரோக்கியமான மனிதனே, செக்ஸ் நடவடிக்கையிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதற்கு உடற்பயிற்சி அவசியம். நல்ல வாக்கிங் மிகச் சிறந்த ஆரோக்கிய மருந்தாகும். அதேபோல உங்களது ஆண்குறிக்கும் பயிற்சி தருவது அவசியம். இதற்கென சில பயிற்சி முறைகள் உள்ளன. அதை கற்றுக் கொண்டு செய்து வருவது நல்லது.தம், தண்ணி வேண்டாம் ... புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருந்தால் முதலில் அதை நிறுத்தி விடுங்கள். இது உங்களது ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு பெரிய எமனாகும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும், மூச்சுத் திணறல் ஏற்படும், உடல் இயக்கத்தையும் குறைத்து விடும். நீண்ட நேர உறவு என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரத்திலேயே மூச்சு வாங்கி மனைவியிடம் திட்டு வாங்க நேரிடும்.அடிக்கடி கை விளையாட்டு வேண்டாம்.. சில ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகும் கூட சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் இருக்கும். இது செக்ஸ் வாழ்க்கையை சீர்குலைத்து விடும். இயற்கையான உறவுக்கு அருமையான வழி இருக்கும்போது ஏன் இந்தக் கை விளையாட்டு விட்டு விடுங்கள். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஆண் குறியின் நீட்சித் தன்மையும் குறைந்து போய் விடும். உங்களது மனைவியின் செக்ஸ் பசிக்கு சரியான சாப்பாடைப் போட முடியாத நிலைக்கு அது போய் விடும். எனவே பொறுமை மிக மிக அவசியம்.சரியான பொசிஷனை தெரிந்து கொள்ளுங்கள்... உறவின்போது பல்வேறு பொசிஷன்களை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். அதில் உங்களுக்கும், உங்களது மனைவிக்கும் சரியான, பொருத்தமான, இன்பம் தரக் கூடிய பொசிஷன் எது என்பதை கண்டறியுங்கள். அதன் பின்னர் அதில் தீவிர கவனம் செலுத்துங்கள். குறிப்பாக மிஷனரி, டாகி போன்ற பொசிஷன்களுக்கு நல்ல இன்பம் கிடைக்கும். அதில்தான் முழுமையான இன்பத்தையும் அனுபவிக்க முடியும். எனவே அதை முடிந்தவரை பாலோ பண்ணுவது நல்லது. உங்களது சக்தியை கடினமான பொசிஷன்களில் வீணடித்து விடாதீர்கள்.ஜட்டி டைட்டாக இருக்க வேண்டாம்.. சிலர் டைட்டான ஜட்டி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொஞ்சம் லூசாக இருந்தால்தான் நல்லது. இதனால் உங்களது மர்ம உறுப்புகளுக்கு இறுக்கம் ஏற்படுவது குறையும், மேலும் அடிக்கடி ஜீன்ஸ் போடுவதையும், ஜீன்ஸ் போட்டபடியே எல்லா வேலைகளையும் செய்வதையும் தவிருங்கள். தூங்கும்போது வெறும் லுங்கியுடன் தூங்குங்கள், உள்ளே ஜட்டி தேவையில்லை. அதெல்லாம் பேன்ட் போட்டுப் போகும்போதுதான் தேவை. மற்ற நேரத்தில் சுதந்திரமாக இருக்க விடுங்கள்.இப்படி சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், நீண்ட நேர செக்ஸ் உறவுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம், வலுவான உறவுக்கும் வழி காணலாம்.
English summary
Have you ever felt ashamed of not satisfying your partner because of erection problems? As you grow older you'll find it a little difficult to get a strong erection and satisfy your partner in bed. A weak erection can strain your sexual relationship, and hurt your pride as well, to say the least. So, it is always necessary to maintain a healthy lifestyle for a fully satisfying sex life. Remember, a strong and hard erection is something women crave most for while you gear up for some action between the sheets.
Story first published: Tuesday, July 24, 2012, 17:54 [IST]

Get Notifications from Tamil Indiansutras