டென்ட் போடுங்களேன்
வீட்டில் அதே அறையில் என்றால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்யும். எனவே வார விடுமுறையில் தம்பதி சமேதராக புதிதாக எங்காவது டூர் போங்களேன். வனப்பகுதி என்றால் கூடுதல் சவுகரியமாம். அங்கே டென்ட் போட்டு புதிதாய் தொடங்குங்களேன். இருவருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும். வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருந்து விடலாமா என்று எண்ணத்தோன்றும்.
கேமரா ரசிகர்கள்.
உங்களை நீங்களே படம் எடுத்து ரசியுங்களேன். இதனால் ‘கிக்' அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எதிர்பாராத தருணங்களில் உடையோடோ, உடையின்றியோ உங்கள் துணையை நீங்கள் எடுக்கும் புகைப்படம் கிளர்ச்சியை அதிகரிக்குமாம். அதேபோல் மோட்டார் பைக்கில் துணையை பின்னால் அமரவைத்துக்கொண்டு மனதுக்கு பிடித்த இடத்திற்கு நீண்ட தூரம் பயணம் செல்வதும் உங்கள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம்.
மீன், டார்க் சாக்லெட்
உடலின் உற்சாகத்தை, லிபிடோ சக்தியை அதிகரிப்பதில் சல்மான் மீன், டார்க் சாக்லெட்டிற்கு கூடுதல் சக்தி உண்டாம். சல்மான் வகை மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் கிளர்ச்சியை தூண்டி விடுகிறதாம். அதேபோல் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் டார்க் சாக்லேட் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அடுத்தமுறை இனி அலுவலகத்தில் இருந்து போகும் போது அல்வாவிற்கு பதிலாக டார்க் சாக்லேட் வாங்கிப் போகலாம்.
ஹைஹீல்ஸ் போடுங்களேன்
செக்ஸியான உடைகள் அணிவது கிளர்ச்சியை அதிகரிக்கும் என்பார்கள். ஆனால் ஹைஹீல்ஸ்க்கு செக்ஸ் உணர்வை தூண்டும் சக்தி இருக்கிறதாம். படுக்கை அறைக்கு செல்லும் போது ரெட் கலரில் மினி ஸ்கட் ஹைஹீல்ஸ் என அணிந்து செல்லுங்களேன் உங்கள் துணைவரின் உற்சாகம் ஊற்றெடுக்கும். உங்களின் கால் அழகும், தன்னம்பிக்கையும்தான் அதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.