உடனே குளிக்காதீங்க!
தாம்பத்ய உறவிற்குப் உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அந்த நேரத்தில் ஒன்றாக குளித்தால் கூடுதல் சுகம்தான். அதற்காக உறவு முடிந்த உடனே குளியலறை நோக்கி ஓடத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள். வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைத்தாலும் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். எனவேதான் உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு நடந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆடை அணியவும் அவசரம் வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் உங்களின் துணை உங்கள் இன்னும் கொஞ்சநேரம் ரசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். எனவே ரசனைக்கு தடை போடும் வகையில் ஆடை அணிய அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
உடனே தூங்காதீங்க!
செக்ஸ் உறவு முடிந்ததும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனே தூங்கிவிடுவது தவறு. இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். தம்பதியர் பலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. அதாவது உடனடியாக உறக்கத்தில் விழுவது,செக்ஸ் உறவு எவ்வாறு இருந்தது என சிந்திக்க விடாது அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் முடியாது போய்விடும்.
படிக்க வேண்டாம்
உறவின் போது தம்பதியர் மனதில் ஓடுவது என்ன என்பதற்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. ஆனால்உறவிற்குப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போகிறவர்கள் அதற்கான விடையைக் கூறி விடுகிறார்கள். தாம்பத்திய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின் போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால் அது உண்மையான மகிழ்ச்சியை தராது என்கின்றனர் நிபுணர்கள்.
தனித்தனியே உறங்க வேண்டாம்
தம்பதியர் தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் உறவினால் மகிழ்ச்சி நிறைந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும்,போர்வையையும் தூக்கிக்கொண்டு தனியாக தூங்கச் செல்வது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அன்றைய தினம் மட்டுமாவது ஒருபோர்வைக்குள் இருதூக்கம் அவசியமாம்.
உடனே சாப்பிடாதீங்க
படுக்கையறைக்கு போகும் முன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து நிதானமாக சாப்பிடுவது காதலை அதிகரிக்கச் செய்யும். ஆனால் தாம்பத்ய உறவிற்குப் பின் உடனே சாப்பிடுவது, மோசமான விசயமாகும். உங்களுக்கு உடல் பசியில்லை... குடல் பசி தான், உறவின் போது உங்களுக்கு சிந்தனை எல்லாம் சாப்பாடு மீதுதான் இருந்திருக்கிறது என்று துணையை நொந்து கொள்ளச் செய்யும் உங்கள் செயல்.
விமர்சனம் வேண்டாம்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. எனவே படுக்கை அறையில் உங்களின் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி விமர்ச்சிக்க வேண்டாம். அது அவரை அவமானப்படுத்தியதாக அமைந்துவிடும். எனவே எதையும் விமர்ச்சிக்கும் வகையில் கூறாமல் சற்று நயமாக அப்படி நடந்து கொண்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறுவதுதான் தொடரும் உறவுக்கு நன்மை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
பேச்சுக்கு தடை போடுங்க
படுக்கையறையில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு சில நிமிடங்கள் வரை அதை பற்றிய நினைவுகளில் மூழ்கியிருக்க வேண்டும். அதை விடுத்து அந்த நேரத்தில் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடைஞ்சலாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச்செய்யும். பொதுவாக தம்பதியர்கள் செய்யும் தவறுதான். எனவே நட்பு ரீதியான பேச்சுக்களை காலையில் வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
குழந்தைகளுக்குத் தடை
நமது அந்தரங்கத்தில் அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவுக்குப் பின் குழந்தைகளை உடன் படுக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் "ரொமாண்டிக் மூடில்"இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.