•  

உங்கள் துணையை மூடுக்கு கொண்டு வரணுமா? இதப்படிங்க!

10 Ways to Get Him in the Mood
 
வீட்டு வேலையை ஒருவழியாக முடித்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றால் அங்கே அப்பொழுதுதான் கம்யூட்டரில் ஆபிஸ் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார் உங்களவர். உடனே மூடு அப்செட் ஆகி உட்கார்ந்து படுத்து விட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். என்ன செய்தால் உங்களவரை உங்கள் வழிக்குக் கொண்டு வரமுடியும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.



பாத்டப்பில் வெனிலா எசன்ஸ் வாசனை செக்ஸ் கலந்த நுரையோடு கூடிய தண்ணீரை நிரப்பவும். இது ஆண்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வாசனை என்று சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் போய் குளிக்க வைத்தால் அப்புறம் பாருங்கள் உங்களவர் உங்களுக்கு ஏற்றார்போல தயாராகிவிடுவார்.



மசாஜ் செய்யுங்கள்



ஆபிஸ்ல இன்னைக்கு வேலை ஜாஸ்தியா இருந்திச்சா என்று கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் அலுவலக டென்சனை நீக்குங்கள். உடலை, கை கால்களை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலிக்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும். உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய 'பவர்' உண்டு. அப்புறம் என்ன உங்களின் மென்மையான தொடுகையிலே உங்களவர் உங்களுக்கு ஏற்றவராக மாறிவிடுவார்.



காதுக்குள் ரகசியமாய் பேசுங்கள்



மிக மிக நெருக்கமாக அமர்ந்து உங்களின் கண்களால் உங்களவரின் கண்களுக்குள் ஊடுருவுங்கள். உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். மிக அருகில் நெருங்கிச் சென்று லேசாக கிசுகிசுப்பாக பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும்.



கைகளால் ஓவியம் வரையலாம்



உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும். அதேபோல் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காதவரும் மயங்குவார். உடனடி உறவுக்கான 'பாஸ்போர்ட்' இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் ஓவியம் வரையுங்கள். நிச்சயம் 'பார்ட்டி' நெளிய ஆரம்பித்து விடுவார்.



ரொமான்ஸ் சாக்லேட்



ஒரு சிலருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் கூட செக்ஸ் விசயத்தில் ஆர்வமில்லாதவராக இருப்பார். எனவே டார்க் சாக்லேட் வாங்கி வைத்திருந்து ஸ்பெசலாக அந்த நேரத்தில் சாப்பிடக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம் குறைய ஆரம்பிக்கும் மூடு மாறி உங்களவர் லவ் மூடுக்கு தயாராகிவிடுவார்.



இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம் என்கின்றனர் நிபுணர்கள் ட்ரை பண்ணுங்களேன்.




English summary
Getting a man in the mood isn't usually a serious challenge. By their own admission, most guys are more than happy to engage in acts of intimacy at the drop of a dime. But we all - men and women, alike - have those days when we could use a little help in the romance department. And, besides, most guys are seriously turned on when their partner takes the lead. Below, are my well-researched, highly effective intimacy tips.
Story first published: Monday, July 2, 2012, 12:25 [IST]

Get Notifications from Tamil Indiansutras