பருவ வயதை எட்டிய ஆண், பெண்ணிற்கு செக்ஸ் தேவை ஏற்படுவது இயல்பானதுதான். உடல்தேவையை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்து வைக்கின்றனர்.
செக்ஸ் பொம்மைகள் விற்பனை செய்யும் இணையதளம் ஒன்று எந்த வயதில் சரியான திருப்தியான செக்ஸ் கிடைக்கிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 17 வயதில் இருந்து 60 வயதுடைய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்கள் பங்கேற்றனர். அந்த ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
40 சதவிகித பெண்கள் 28 வயதில் முழுமையான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் 50 முதல் 60 வயதுடைய பெண்கள் தங்களின் 46 வது வயதில் முழுமையான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள குடும்ப உறவுகள் நல ஆய்வாளர் ட்ரேசி காக்ஸ், இந்த ஆய்வானது செக்ஸ் பற்றிய பெண்களின் ஆர்வமும், அவர்கள் கூறிய தகவல்களும் வியப்பூட்டும் வகையில் இருந்ததாக தெரிவித்தார். செக்ஸ் பற்றிய முட்டாள்தனமான நம்பிக்கையை உடைப்பதாக இருந்ததாக கூறியுள்ளார். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் 33 வயதில் முழுமையான செக்ஸ் அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வயதில் கடமைகள் ஓரளவிற்கு முடிந்திருக்கும். சுமைகள் இல்லாத காலம் என்பதால் அப்பொழுது அவர்களால் ரசிப்புத்தன்மையோடு அனுபவிக்க முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.