•  

மெனோபாஸ் காலத்தில் நன்மை தரும் வயாக்ரா : ஆய்வில் தகவல்

Viagra
 
தாம்பத்ய உறவில் ஆண்களுக்கு உற்சாகத்தை தரும் வயாக்ரா மாத்திரை பெண்களுக்கு நன்மை தருகிறதாம். கருப்பை பலமில்லாத பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வகையில் உதவிபுரிகிறது என்று இங்கிலாந்தில் உள்ள மகப்போறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிக்கும் டேவிட் - ஹோரான் தம்பதியர் திருமணமாகி எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தனர். ஹோரன் கருத்தரித்து சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். பலமுறை இவ்வாறு நடந்ததால் நாட்டிங்காம் நகரில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை நிலையத்துக்கு கெர்ரி ஹோரன் சென்றார். அவர்கள் சோதனைக் குழாயில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்த பிறகு கரு முட்டையை கருப்பைக்குள் வைக்க தீர்மானித்தனர்.அதன்படி சோதனைக் குழாயில் கரு முட்டை உருவாக்கப்பட்டது. அந்தக் கருமுட்டையை கருப்பைக்குள் வைத்தனர். ஆனால் கருமுட்டை கருப்பையில் பதிய முடியவில்லை.அதனால் கருச்சிதைவு மீண்டும் ஏற்பட்டது. இம்முயற்சிகளை மூன்று முறை தொடர்ந்தனர். ஆனால் மூன்று முறையும் கருச்சிதைவுதான் ஏற்பட்டது. அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்படுவது ஏன் என மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது கெர்ரி ஹோரனின் கருப்பை சுவர் மிக மெல்லியதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மெல்லியதாக கருப்பைச் சுவர் இருப்பதால் கருமுட்டை கருப்பை சுவரில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என உறுதி செய்தனர்.இதனையடுத்து ஆலோசனை மேற்கொண்ட மருத்துவர்கள் வயாகரா உட்கொண்டால் பெண்களுக்கு கருப்பைப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். அதிக ரத்தம் செல்வதால் கருப்பை சுவர் தடிமனாகும். கருப்பை சுவர் தடிமன் அதிகமானால் கரு முட்டை கருப்பையில் பதிந்து வளரும் வாய்ப்பு ஏற்படும் என முடிவு செய்தனர். இது மிகவும் அபாயகரமான முறை எனினும் மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் வயாகரா சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதற்கு சம்மதித்த ஹோரன் வயாக்கரா சாப்பிட முடிவு செய்தார். ஆனால் முதல் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதும் உடலே சிவந்து போய்விட்டது. முகம் ரத்த சிவப்பாகி விட்டது. ஆனால் இதற்கு ஹோரன் பயப்படவில்லை. நாளொன்றுக்கு ஒரு வயாகரா வீதம் ஒன்பது நாள்களுக்கு சாப்பிட்டார்.அவரது கருப்பைக்கு ரத்தம் செல்வது படிப்படியாக அதிகரித்தது. பின்னர் அவரது கருப்பையை மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது கருப்பை சுவர் தடிமனாகி இருப்பது உறுதியானது. இந்த அளவு கருப்பைச் சுவர் தடிமனாக இருந்தால் கருமுட்டை பதிந்து கொள்ளும். கரு வளரும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.சோதனைக் குழாயில் தயாரிக்கப்பட்ட கருமுட்டையை ஹோரனின் கருப்பையின் உள்ளே நான்காவது முறை எடுத்துச் சென்றனர். இந்த முறை கருமுட்டை கருப்பையின் உள்சுவரில் பதிந்து வளரத் தொடங்கியது. பின்னர் பத்து மாதங்கள் கழித்து ஹோரனுக்கு சிக்கல் எதுவும் இன்றி குழந்தை பிறந்தது. வயாகராவுக்கு புது உபயோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டதுஅதேபோல் பெண்கள் வயக்காரா சாப்பிடுவதால் மெனோபாஸ் பருவத்தில் ஏற்படும் டென்சன், மனஅழுத்தம் போன்றவை ஏற்படுவது பாதி அளவாக குறைகிறது என்று பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மெனோபாஸ் பருவத்தை எட்டிய 17 பெண்களுக்கு வயாக்ரா மாத்திரையை கொடுத்து சோதனை செய்து கண்டறிந்துள்ளனர். இந்த வயாக்ரா மாத்திரை பெண்களுக்கு உற்சாகத்தை அதிகரிப்பதோடு மெனோபாஸ் காலத்தில் சிக்கல் இன்றி ஆர்கஸம் ஏற்பட வழிவகுப்பதாக தெரிவித்துள்ளனர்.
English summary
Women can benefit from taking the impotence drug Viagra, scientists have claimed. Research by a team from the University of Boston has found that the drug can benefit women who have had a hysterectomy or who have gone through the menopause.
Story first published: Tuesday, June 12, 2012, 9:45 [IST]

Get Notifications from Tamil Indiansutras