குடும்ப வாழ்க்கையில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும், பெண்மைக்கு ஆதாரமாக விளங்கும் கருப்பையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் உடல் அமைப்பிலும் ஹார்மோன் சுரப்பதிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. கணவரின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அதிக அளவில் தாம்பத்ய உறவு மேற்கொள்ளும் பெண்கள் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனராம். மேலும் இளமை காலத்திலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிக அளவு தாம்பத்திய உறவு மேற்கொள்ளும் பெண்களுக்கு பலவகையான நோய்களும், அமைதியில்லாமையும், அதிருப்தியும், எரிச்சலும், விரக்தியும், சிடுமூஞ்சித்தனமும் அடைகின்றனராம். இதனால் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கூட அவர்களுக்கு அக்கறை குறைகிறது. எனவே எதிலும் கட்டுப்பாடு வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
அதேபோல் ஆடைகள் அணியும் போதும் இறுக்கமாக எதையும் இடுப்பில் கட்டக்கூடாது. கனமான உள் பாவாடைகளை அணியக்கூடாது. குதிகால் உயர செருப்புகளை அணியக்கூடாது என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இடுப்புவலி, முதுகுவலி, ஆகியவை வராமல் தடுக்கலாம். நரம்புக் கோளறுகள், கருப்பைக் கோளாறுகள் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.