•  

இதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா?

Heart Attack Patient
 
பசி, தாகம் போல செக்ஸ் என்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமானது. அதனை சரியான முறையில் கையாண்டால் அதை போல மருந்து எதுவும் கிடையாது. அதேசமயம் அதிக அளவிலான உணர்ச்சி வசப்படக்கூடிய செக்ஸ் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். இருதய நோயாளிகளுக்கு செக்ஸ் என்பது அச்சுறுத்தக்கூடியதாகவே இருக்கிறது. அதேசமயம் மாரடைப்பிற்கு இலக்கானவர்கள் மருத்துவர்களின் அறிவுரையோடு உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் அதேசமயம் அதிக அளவில் உணர்ச்சி வசப்படுதல், வேகமாக செயல்படுதல் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.உணர்ச்சிவசப்படுவது ஆபத்துஉடலுறவின்போது நாடித்துடிப்பானது அதிகரிக்கிறது. அதுவும் உச்சகட்ட உணர்வின் போது 140 முதல் 180 வரை அதிகரிக்கிறது இதுவே சில சமயம் ஆபத்தாகிறது. ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் யுனோ திடீரென ஏற்பட்ட 5559 மரணங்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தவர். இவர்களில் 34 பேர் உடலுறவின் போது ஏற்பட்ட உச்சகட்டத் துடிப்புகளால் உயிரிழந்தவர்கள் என அவர் கூறியுள்ளார்.இதயநோய் கண்டவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் போது மனைவியர்களையும் கூட வைத்துக் கொண்டே மருத்துவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும். அப்போதுதான் கணவனின் உண்மையான உடல்நிலை மனைவியர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் இதயநோயாளிகள் உடலுறவு கொள்ள தடையில்லை என்பதை மனைவிகளுக்கு மருத்துவர்கள் நேரில் விவரம் சொல்ல முடியும்உறவுக்கு தடையில்லைமாரடைப்பு முதல் தடவையாக ஏற்பட்டவர்களுக்கு மருத்துவரீதியாக சிக்கல்கள் எதுவும் இல்லாவிட்டால் சாதாரணமாக உடலுறவு கொள்ள எந்தவிதத் தடையுமில்லை. மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அத்தகைய நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் உடற்பயிற்சி பரிந்துரை செய்கின்றனர்.மாரடைப்பு ஏற்பட்டு 40 நாள் கழித்து உடலுறவு கொள்ளலாம் என்று கூறும் மருத்துவர்கள் மனைவியுடன் மட்டும் உடலுறவு செய்ய வேண்டும் என்கின்றனர். மேலும் மனைவி அதிக ஈடுபாடு காட்டி கணவரின் உடலுக்குச் சிரமம் தராத உடலுறவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். அதேசமயம் பெண்களில் இதய நோய் கண்டவர்களது உடலுறவு நிலை தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படவில்லை.மன உளைச்சல் குறையும்நோயாளிகளைப் பொறுத்தவரை சாதாரணமாக மன உளைச்சல் மற்றும் அன்றாட வாழ்வியல் காரணங்களால் ரத்த அழுத்தம் ஏற்படக் கூடியவர்களுக்கு உடலுறவு நல்ல நிவாரணமும் மருந்தாக அமையக்கூடும். இதன் காரணமாக மன உளைச்சல் குறையும். இரத்த அழுத்த அளவும் குறைய வாய்ப்பு உண்டு. புத்துணர்வு ஏற்படும். அதே சமயம் மிகை ரத்த அழுத்த (High Bp) நோயாளிகள் உடலுறவில் ஈடுபடக் கூடாது. எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். மனதில் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் உடலுறவில் ஈடுபடும்போது உண்டாகும் உணர்ச்சிகள் அதிகரிப்பால் இரத்த அழுத்தம் மேலும் உயர்ந்துவிடும். மூளையிலுள்ள நுண்ணிய சின்னஞ்சிறிய இரத்த நாளங்கள் வெடித்து ரத்தக் கசிவு (Cerebral haemorrhage) நிலைகூட ஏற்படலாமாம்.தொற்றுநோய்கள்டி.பி. நோயாளிகளைப் பொறுத்த அளவில் தொற்றும் வகை சயரோக நோயாளிகள் உடலுறவில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும். நோயாளியிடமுள்ள கடுமையான நோய்த்தன்மை உடலுறவு நெருக்கத்தின் போது கிருமிகள் மூலம் பரிமாறி விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதேசமயம் தொற்றும் வகை சயரோக இல்லாதவர்கள் எப்போதாவது அரிதாக உடலுறவு கொள்வது தவறில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary
In terms of things that are horrible, we have to imagine that having a heart attack during sex, or having a partner have a heart attack during sex, would be traumatizing enough to make a person never want to have sex again. What's significant is that according to doctors, less than one percent of people who have heart attacks do while having sex.
Story first published: Tuesday, June 26, 2012, 9:17 [IST]

Get Notifications from Tamil Indiansutras