நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்' என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.