நன்கு தூங்குவதன் மூலம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரிக்கிறதாம். இது செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக விளங்க உதவுகிறதாம்.
இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தினர். அதன்படி சில ஆண்களைத் தேர்வு செய்து ஒரு வாரத்திற்கு, தினசரி இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவான அளவில் தூங்க வைத்தனர். அப்போது அவர்களின் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், முழு இரவும் தூங்கியவர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகம் இருந்தது தெரிய
வந்தது.
டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவதால் ஆண்களுக்கு பல பிரச்சினைகள் உண்டாகிறதாம். செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்லாமல், உடல் பலம், தசைகளின் இறுக்கத் தன்மை, எலும்புகளின் உறுதி ஆகியவற்றிலும் கூட கோளாறுகள் ஏற்படுகிறதாம்.
அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு தினசரி 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க முடிகிறதாம், வேலைப்பளுவே இதற்குக் காரணம். இதனால் அவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் பல ஏற்படுகிறதாம். சரியாக தூங்காத காரணத்தால் செக்ஸில் ஆர்வமின்மை, உடல் அசதி, சோம்பேறித்தனம் உள்ளிட்டவை அவர்களிடம் குடியேறுகிறதாம்.
எனவே சரியான அளவில், கூடுமானவரை குறைந்தது 8 மணி நேர தூக்கத்தைக் கடைப்பிடித்தால் செக்ஸ் வாழ்க்கை மட்டுமல்லாமல், உடல் நலனிலும் கூட நல்ல முன்னேற்றம் ஏற்படுவதைக் காண முடியும் என்பது டாக்டர்களின் கூற்று.