•  

திருமணத்திற்கு முன் செக்ஸ்: கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள்!

 
இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளைய தலைமுறையினரிடையே திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ்க்கு 40 சதவிகிதம் பேர் வரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.காமசூத்ரா காண்டம் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை உள்ளிட்ட 10 இந்திய நகரங்களில் வசிக்கும் 17 ஆயிரத்து 45 இளைஞர், இளைஞிகள் பங்கேற்றனர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் அதிர்ச்சிகரமான தகவல்களோடு சில சுவாரஸ்யமான தகவல்களும் தெரியவந்தன.திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்டதற்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் என்பதுதான் வேதனை. இதை விடக்கொடுமை என்னவென்றால், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது.சினிமாக்களாலும், டி.வி தொடர்களாலும் தான், திருமணத்துக்கு முந்தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடுக்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது.பெரும்பாலோர், நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர். இது 73 சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்து ஓரினச்சேர்கையும் சமுதாயத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்பதும் சர்வேயில் தெரியவந்தது. இந்த சர்வேயில், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய பயமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதுதான். கருத்தடை சாதனம் பயன்படுத்த வேண்டும் என்பது சிலருக்குதான் தெரிந்துள்ளது.அதுபோல, காண்டம் பயன்படுத்துவோரில் சர்வேயில் பங்கேற்றவர்கள் என்று பார்க்கும் போது, சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீதம்பேர் தைரியமாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அடுத்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிகள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.செக்ஸ் உறவு கொள்ள ஏற்ற இடம் என்றால், அது அவரவர் படுக்கை அறைதான். ஆனால் சிலருக்கு அதிலும் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பிடித்த இடம் காரும், பூங்காவும்தானாம். அடுத்ததாக பாத்ரூம் சரியான இடம் என்று கூறியுள்ளனர். செக்ஸ் உறவுக்கு ஏற்ற நேரமாக வாரநாட்களில் இரவிலும், வாரவிடுமுறை நாட்களில் பகலிலும் உறவு கொள்வதாக பெரும்பாலோனோர் கூறியுள்ளனர்.English summary
More than 49% of young urban couples in India say they have had sex before marriage, despite continuing taboos among the older generation, according to a new survey. Pre-marital sex is being quickly accepted as normal behaviour
Story first published: Tuesday, June 26, 2012, 11:56 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more