பொதுவாக போட்டி பந்தயங்களில் ஈடுபடுவோர்கள் சில வாரம் சிலமாதம் உட லுறவை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுபாடு நிலவுகிறது. விளையாட்டு வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முதல்நாள் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபடுவதால் அவர்களால் போட்டியில் சரியாக பங்கெடுத்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். இதனால் ஒலிம்பிக் போன்ற உலகப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களின் உடலுறவு விவரம் கூட குழுத்தலைவர்களால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
அமெரிக்கா, குத்துச் சண்டை வீரர் முகமது அலி தனது உலக வீரர் விருது போட்டிகளுக்கு முன் உடலுறவைத் தவிர்த்ததாக அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் இது குறித்து மருத்துவத் துறையில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக எந்த உண்மையும் நிரூபிக்கப்படவில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் விளையாடுவதற்கு முந்தைய உறவு அவர்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரன் அளவு அதிகரிக்கிறதாம். இதனால் போட்டியின் போது அவர்களால் கூடுதல் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலுறவு என்பது உடலிலும் மனதிலும் முக்கிய மான தசை நரம்புகளில் முறுக்கைத் தளர்த்தி சமநிலைப்படுத்தக் கூடியது.விளையாட்டு போட்டிக்கு முதல் நாள் இரவு 15 நிமிட நேரம் மனைவியுடன் உடல் உறவு கொள்வது அடுத்தநாள் வெற்றியை பாதிப்பதில்லை. மாறாக நன்மை செய்யும் என்றும் விளையாட்டுத்துறை மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
விளையாட்டு போட்டியில் பங்கேற்றும் முன்னதாக உறவில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கக் காரணம் வீரர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்பதனாலும், மனரீதியாக அவர்கள் பாதிக்கப்படலாம் என்பதனாலும்தான் என்கின்றனர் விளையாட்டுத்துறையினர். இத்தாலி நாட்டின் விளையாட்டு நிபுணர்களின் டாக்டர் டெர்சி விளையாட்டு வீரர்கள் வாரம் 3 முறை உடலுறவில் ஈடுபடலாம். அதேசமயம் முன்காதல் விளையாட்டில் அதிக நேரம் ஈடுபட்டால் மூளை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எது எப்படியோ ஒலிம்பிக் போட்டியில ஜெயிச்சு பதக்கம் வாங்க வைங்கப்பா !