•  

செக்ஸ் பிரச்சினையா? மனரீதியா சரி செய்யலாம்!

Kamasutra
 
செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலோனோருக்கு மனரீதியான சிக்கல்களினால் ஏற்படுகின்றன. பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அதற்கென உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகலாம் அல்லது உளவியல் நிபுணர்களை சந்தித்தும் ஆலோசனை பெறலாம். மனதில் தன்னம்ப்பிக்கையையும், உடல்ரீதியாக பலத்தையும் பெறுவதன் மூலம் பாலியல் ரீதியான சிக்கல்களை தீர்க்கலாம்.பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.எஸ்டிடி (sexually transmitted infections) என்பது பெரும்பாலான ஆண், பெண் போன்றவர்களுக்கு ஏற்படும் பால்வினை நோயாகும். உடல் உறுப்புகளில் வலி, புண்கள் போன்றவை இதன் அறிகுறியாகும்.பிறப்புறுப்பில் புண்கள் சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும்.ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.ஒருவரின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யி‌ல் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இ‌தி‌ல் ஒரு ‌சில அ‌றிகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்று‌க் ‌கிரு‌மிகளாலு‌ம் ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவு‌ம் மு‌க்‌‌கிய‌ம்.ஒரு சில ஆண்களுக்கு உறவில் ஈடுபடமுடியாமல் தனது துணையை திருப்த்தி படுத்த முடியாத அளவிற்கு இயலாமை ஏற்படும். இது ஹார்மோன் குறைபாடினால் ஏற்படும். எனவே ஹார்மோன் சிகிச்சை செய்து கொள்ளலாம். கவுன்சிலிங் மூலமும், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி மருத்துவமுறையிலும் இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.அதேபோல் ஆர்கஸம் எனப்படும் உச்சக்கட்டம் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுவதில்லை. இதனால் எதையோ இழந்தது போல காணப்படுவார்கள். உளவியல் நிபுணர்களை சந்தித்து சரியான கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால் சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம். விந்தணுவில் ரத்தம் வெளியாதல், பிறப்புறுப்பில் ரத்தம் வெளியானாலும் ஒருவித அச்சம் ஏற்படும். இதனால் உறவை பற்றி நினைக்கவே அடுத்தமுறை அஞ்சுவார்கள். அதேபோல் பிறப்பறுப்புக்கள் சிறியதாக இருந்தாலும் செக்ஸ் பற்றிய அச்சமும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். இதுபோன்ற உடல்ரீதியான, உளவியல்ரீதியான சிக்கல்களை சிறப்பு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
Most of the so called sex diseases are psychological problems and are not the actual diseases. Most of these sex problems can be solved by sex councelling and need not any medicinal treatment.
Story first published: Wednesday, June 13, 2012, 10:41 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more