புதிதாக திருமணமான தம்பதிகள் அதிகம் ஆசையோடு இருப்பார்கள். அவர்களுக்கு ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். எனவே அவர்கள் முதலிரவு நாளில் நான்கைந்து முறை கூட உறவில் ஈடுபடலாமாம். ஏனென்றால் அன்றைய தினம் அவர்களை தொந்தரவு செய்ய ஆளில்லையாம். அதனால்தான் தம்பதியர்களை தேனிலவுக்கு எல்லாம் அனுப்பி வைக்கின்றனராம்.
வயதாக வயதாக ஆர்வம் படிப்படியாக குறைந்து விடும். எனவே வயதிற்கு ஏற்ப தாம்பத்ய உறவின் அளவுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை ஈடுபடலாம் என்றும் அவர்களே கூறியுள்ளனர்.
22 முதல் 25 வயது வரை உடைய தம்பதியர் வாரத்திற்கு 3 முறை உறவு வைத்துக்கொள்ளலாமாம். 32 முதல் 35 வயது வரை உடையவர்கள் வாரத்திற்கு 2 முறையும், 41 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அப்பொழுதுதான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏனெனில் வயதாக வயதாக செக்ஸ் பற்றிய ஆர்வம் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடுமாம். ஆணோ, பெண்ணோ நிறைய பொறுப்புகள் அதிகரிக்குமாம். எனவேதான் செக்ஸ் விசயத்தில் கணவனோ, மனைவியோ கட்டாயப்படுத்தக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் கனிவான பேச்சு, கரிசனமான செயல்பாடுகள், சின்னதாய் தலை கோதி விடுவது, அன்பாய் கை, கால் பிடித்து விடுவது போன்றவையே செக்ஸ் உறவை விட மேம்பட்டதாய் இருக்கும் என்றும் அதைத்தான் பெரும்பாலோனோர் விரும்புகின்றனர் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருமணமான புதிதில் ஒருவருக்கொருவர் ஆர்வக்கோளாறினாலும் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் அடிக்கடி உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் குழந்தை பிறந்து சில வருடங்கள் கடந்த பின்பு பொறுப்புகளும், பணிச்சூழலும் ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்திவிடும். எனவே செக்ஸில் கொஞ்சம் ஆர்வம் குறைந்து விடும். எனவேதான் தாம்பத்ய உறவுக்கு என்று சில எல்லைகளை வகுத்துக்கொண்டால் யாருக்கும் எந்த வித சிரமமும் இருக்காது வாழ்க்கையும் சிக்கல் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.