•  

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்!: அதிர்ச்சி ரிப்போர்ட்

Proven 10 factors Can Kill Sperm
 
படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், சிக்சன் என விதவிதமான வித்தியாசமான இடங்களில் உறவு கொள்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். பெரும்பாலோனோர் சுடுநீர் பாத்டப்பில் உறவில் ஈடுபட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண்டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கைதான். ஆனால் இது தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது என்கின்றர் மருத்துவர்கள். மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. சுடுநீரில் உறவு கொண்டாலும் கட்டாயம் ஆணுறை அணியவேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.ஓவர் சூடு ஆகாதுவிந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.மனித உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். அதற்கேற்பதான் மனித உடலானது படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களின் உடலில் அதிக சூடு ஏறினால் விந்தணு உற்பத்தி பாதிக்குமாம். எனவேதான் சூடு நிறைந்த பாத்டப்பில் அதிக நேரம் குளிப்பதோ, உறவில் ஈடுபடுவதோ கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இது விந்தணு உற்பத்தியை கண்டிப்பாக பாதிக்குமாம். அதேபோல் ஆண்களுக்கு அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நேரத்திலும் உறவில் ஈடுபடக்கூடாதாம்.இறுகலான உடைஆண்கள் அணியும் இறுகலான பேண்ட் ஆண்மைக்கு ஆபத்தாகிறதாம். அதேபோல் டைட்டான உள்ளாடை அணிவதும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதாம். அதேபோல் லேப் டாப் ஐ மடியில் வைத்து உபயோகித்தால் அதில் உள்ள கதிர்வீச்சு மூலம் விந்தணு உற்பத்தி பாதிக்கிறதாம். அதிக அளவில் செல்போன் உபயோகிப்பவர்களுக்கும்,செல்போனை பெல்ட்டில் அணிபவர்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறதாம்.உடல் பருமன்உடலில் அதிக சேர்ந்தாலோ, உடல் பருமனால் பாதிக்கப்பட்டாலோ விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். அதே போல் மது, சிகரெட், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறதாம். ஒரு சிலருக்கு ஹார்மோன் பிரச்சினைகளாலும், மரபணு சிக்கல்களினாலும் விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் மன அழுத்தம், மனஇறுக்கம் உள்ளிட்ட காரணங்களினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறும் மருத்துவர்கள் சரியான பரிசோதனையின் மூலம் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.English summary
There are many things that can make it difficult to get a baby pair. From sperm allergies, poor egg quality, until the sperm are not effective. About 1 in 10 couples experience infertility. Factors expected to contribute to the man as much as 30% of total cases is infertility.
Story first published: Thursday, June 28, 2012, 12:09 [IST]

Get Notifications from Tamil Indiansutras