ஹாரி பாட்டர் நூல்களை வாங்க விழுந்தடித்த கூட்டத்தை விட இந்தப் புத்தகத்தை வாங்க மக்கள் கூட்டம் கட்டியேறிக் கொண்டிருக்கிறதாம்.
நியூயார்க் டைம்ஸின் டாப் 10 புத்தக வரிசையில் இந்த ஷேடுக்குத்தான் முதலிடம். இங்கிலாந்து மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பெண்கள் கையில் காதலர்கள் மற்றும் கணவர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் புரண்டு கொண்டிருக்கிறதாம்.
ஒரே வாரத்தில் இதுவரை படைக்கப்பட்டிருந்த விற்பனை சாதனைகளை தூக்கி சாப்பிட்டு விட்டதாம் இந்த போர்ன் புத்தகம். ஹாரி பாட்டர் நூல்கள் மற்றும் தி டாவின்சி கோட் ஆகியவற்றின் விற்பனை சாதையை இந்த நூல் தாண்டி விட்டதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த நாவலை எழுதிய இ.எல் ஜேம்ஸ் 35 வயதான ஒரு தாய் மற்றும் மனைவி, இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். மொத்தம் மூன்று தொடர்களாக இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ். மற்ற இரு புத்தகங்கள் - 50 ஷேட்ஸ் டார்க்கர், 50 ஷேட்ஸ் ஃப்ரீட் ஆகியவை. இவையும் கூட விற்பனையில் ஹிட்டாகியுள்ளன.
கோடீஸ்வரர் கிறிஸ்டியன் கிரேவுக்கும், பல்கலைக்கழக மாணவி அனஸ்தசியா ஸ்டீல் என்பவருக்கும் இடையிலான காதல் களியாட்டமே இக்கதையின் கருவாகும். அப்பெண்ணுக்குள் இருக்கும் காதல் மற்றும் காமம் எப்படி வெளிப்படுகிறது என்பதை செக்ஸியாக கொடுத்துள்ளார் ஜேம்ஸ். செக்ஸ் விளையாட்டுக்களை கிராபிக்ஸ் படம் போட்டும் புத்தகத்தில் கலக்கியுள்ளார் ஜேம்ஸ்.
இந்த நாவலில் பிடிஎஸ்எம் எனப்படும் செக்ஸ் விளையாட்டுக்களை பின்னணியாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் ஜேம்ஸ். அது என்ன பிடிஎஸ்எஸ்எம்... எல்லாமே முரட்டுத்தனமான முன் விளையாட்டுக்கள் மற்றும் செக்ஸ் விளையாட்டுக்களாகும்.
B என்றால் Bondage. அதாவது காதலன் அல்லது காதலியை கையை, காலை கட்டிப் போட்டு செக்ஸ் ரீதியாக மகிழ்ச்சிப்படுத்துவது. கூடவே நமது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்வது.
D என்றால் Dominance இதில் ஆணோ அல்லது பெண்ணோ யாராவது ஒருவர் டாமினேட் செய்வார். அதாவது கட்டிப் போட்டு களிப்படைபவர். இந்தக் கதையில் நாயகனான கிறிஸ்டியன் கிரேதான் டாமினேட்டிங் கேரக்டராக வருகிறார்.
S என்பது Submission. அதாவது டாமினேட் செய்பவரிடம் அடங்கிப் போவது. இந்தக்கதையில் Anastasia Steele என்கிற கன்னித்தன்மையிழக்காத ஹீரோயின்தான் அடங்கிப் போகிறவராக வருகிறார்!
S என்றால் Sadism. செக்ஸிலும் கூட சித்திரவதை இருக்கிறது. பல்வேறு வகையான செக்ஸ் துன்புறுத்தலை செய்வது இதில் அடக்கம்.
M என்றால் Machoism - அதாவது வீரத்தை, ஆண்மையை முரட்டுத்தனமாக, உடல் ரீதியாக வெளிப்படுத்துவது. செக்ஸ் ரீதியாக துன்புறுத்தி ரசிப்பது.
இது போன்ற செக்ஸுவல் முரட்டுத்தன விளையாட்டுக்களையும் மையமாக வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் ஜேம்ஸ். இவற்றை படமாக வரைந்திருப்பதே நாவலுக்கு கிக் ஏற்பட காரணம். இந்த புத்தகங்களின் வெற்றிக்குக் காரணம் பெண்கள் தானாம். எங்கு பார்த்தாலும் இந்த புத்தகமாகத்தான் இருக்கிறதாம்.
கணவர்களிடமிருந்து உங்களுக்கு விடுதலை என்ற கான்செப்ட்டுடன் இதை எழுதியுள்ள ஜேம்ஸ், புத்தகம் ஹிட்டடித்ததால் அவரும் சூப்பர் ஹிட்டாகி விட்டார்.
வழக்கமான காதல் கதைதான் என்றாலும் காமத்தைக் கலந்து கொடுத்துள்ளதால் பெரிய பரபரப்பாகி விட்டது. விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் 1 லட்சம் பிரதிகள் விற்று புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த பத்து வாரங்களாக இந்த நூல்தான் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது என்பதே இதற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு ஒரு சான்றாகும்.