ஆண்களுக்கு பாலியல் உணர்வு ஏற்பட அவருடைய மன நிலையும், ஹார்மோன்களும் காரணமாக உள்ளன. எனவேதான் ஒருவருக்கு விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் அறுவை சிகிச்சையின் மூலம் விந்து விதைகளை, எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றதாம்.
அதேபோல் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். ஆணோ, பெண்ணோ அவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டுபவை ஹார்மோன்களே. டெஸ்ட்டோஸ்டிரன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் மனித உடலுக்குள் ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் உணர்வை தூண்டுகின்றன என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்களின் மனதில் பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள் அல்லது உறவுகளின் போது "டெஸ்ட்டோ ஸ்ட்ரோன்" என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு பாலுணர்வு தூண்டப்படுகிறது.
பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை வெளியாகும் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு அதிகரிக்குமாம். ஏனெனில் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு தாம்பத்ய உறவு கொண்டால், அந்த நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். உயிரின உற்பத்திக்காக தாம்பத்ய ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்குகிறான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். சிலருக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல் தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும். அப்பொழுது அவர்களுக்கு தாம்பத்ய உறவு கொள்வதற்கான ஆசையும் குறைந்து விடுவதற்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.