முன்பெல்லாம் செக்ஸ் உறவு என்பது குழந்தை பெறுவதற்காக மட்டும்தான், வேறு எந்த சுகத்திற்காகவும் அல்ல என்று நினைப்புடன் பலர் வாழ்ந்திருக்கின்றனர். இன்னும் சொல்வதென்றால் செக்ஸ் இன்பம் என்பதே அர்ப்பமானது என நினைத்தவர்களும் உண்டு. ஆனால் இன்றைக்கு மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது எவ்வளவு அவசியம் என்பதனை இப்போது அனைவருமே அறிந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் செக்ஸ் பற்றி அறிந்தவர்கள் கூட அதனை மேலோட்டமாகவே பார்க்கின்றனர். தன் சக பார்ட்னரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் நிறைய ஆண்களுக்கு இல்லை என்பதும் உண்மை.
செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாத கால கட்டத்தில் வாழ்ந்த பல ஆண்களும், பெண்களும் செக்ஸ் என்றால் என்ன என்பதனை முழுவதும் அறியாமலேயே கடைசிவரையில் தங்கள் வாழ்நாளை வீணாக்கிய கொடுமைதான் எங்கும் நடந்திருக்கிறது. ஆனால் செக்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்ட இக்கால கட்டத்திலும், பலர் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.
படுக்கை அறையில் உறவின் போது நிறைய ஆண்கள் தன் மனைவியை மதிப்பதே இல்லை. திருமணம் என்ற பந்தம், மனைவி தனக்கு வேலை பார்க்கத்தான், தான் விரும்பும் போது சுகம் தருவதற்காகத்தான் என்ற நினைப்புடனேயே ஆண்களும் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில இளைஞர்கள் 'இது வரையில் திருட்டுத்தனமாக உறவு கொண்டு வந்தோம், இனி அந்தத் திருட்டுத்தனம் தேவையில்லை' என்று திருமணத்தைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசுவதும் உண்டு. ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காகத்தான் செக்ஸைப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எல்லாப் பெண்கள் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது இதனைத் தவிர்க்க படுக்கை அறையில் மனைவிக்கு மதிப்பு அளிக்கும் ஆண்களைத்தான் அவர்கள் அதிகம் விரும்புகின்றனராம்.
திருமணமான புதிதில் ஆணுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும், கூச்ச உணர்வு காரணமாக பெண்கள் சற்றே ஒதுங்கி இருப்பார்கள். அதேசமயம் ஆணிடம் இருந்து தாம்பத்ய உறவின் ரகசியங்களை கற்றுக்கொள்ளும் பெண்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் ஆணிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காமல் தவித்து போகின்றனராம்.
இதுவே கள்ள உறவுகள் போன்ற பல தவறுகளுக்கும், மனப்பாதிப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். ஆக கணவன்மார்களே உங்களின் செக்ஸ் ஆசையும், ஈடுபாடும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கட்டும். என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் பெரும்பாலான ஆண்கள் தன் மனைவியைக் கற்பழிப்பது போன்றே உறவில் ஈடுபடுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். என் ஏக்கங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது... அவர் இப்படி நடந்து கொள்ளும்போது என்னால் எப்படி செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியும் என்றெல்லாம் பெண்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
எனவே படுக்கை அறையில் தன்னை மதிக்கத் தெரிந்த, திருப்தி படுத்தத்தெரிந்த அதேசமயம் தன்னை அடக்கி ஆளத் தெரிந்த கணவனைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.