•  

கருப்பை நீக்கிய பெண்களுக்கு செக்ஸில் ஈடுபாடு இருக்காது!

Health Problems That Can Affect Your Sex Life
 
உடல் நலத்தில் பிரச்சினை உள்ள பெண்களோ, கருப்பை நீக்கிய பெண்களோ செக்ஸ் உறவில் ஈடுபாடு குறைந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக இதற்காக 30 வயது முதல் 70 வயதுடைய சுமார் ஆயிரத்து 189 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் இயற்கையாக மாதவிலக்கு நின்றவர்களில் 7 சதவிகிதம் பேரும் ஆபரேஷன் செய்து கொண்டவர்களில் 12 சதவிகிதம் பேரும் செக்ஸ் உறவில் நாட்டமின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தோடும் காணப்பட்டனர்.பெண்களுக்கு பொதுவாக 50 வயது எட்டும்போது, மாத விலக்கு நிற்கத் தொடங்கும். இதுபோன்ற மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு எலும்பு தேய்மான பிரச்சினை, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பின் அவர்களுக்கு பாலுறவில் விருப்பம் இல்லாத நிலை ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.இது தவிர கட்டி போன்ற பல காரணங்களால் கர்ப்பப்பையை நீக்கிய பெண்களோ உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், அவர்களின் பாலுறவுப் புணர்ச்சி நாட்டம் குறைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதேபோல் சிகாகோவில் உள்ள தேசிய சமூகவியல் துறை ஒன்று ஆய்வு மேற்கொண்டது. 57 வயது முதல் 85 வயது வரை உடைய 3ஆயிரம் பெண்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதேபோல் பெரிபேரல் வாஸ்குலர் பாதிப்பு உள்ளவர்களுக்கும், பாலுணர்வு ஈடுபாடு குறைக்கிறதாம். உயர் ரத்த அழுத்தம் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறதாம். மேலும் பணிச்சூழல், குழந்தைகளை கவனிக்கவேண்டும் என்ற சிக்கல், குழந்தைகளின் வாழ்க்கையை செட்டில் செய்யவேண்டும் என்று 50 வயதிற்கு மேல் தம்பதியர் கவலைப்படத் தொடங்குவதினாலும் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கிறதாம்.
English summary
Fortunately for baby boomers, new research shows older adults' sexual activity has less to do with age than with overall health. The problem is that sexuality, and the impact a number of medical conditions and treatments can have on it, is still somewhat of a taboo topic in the doctor's office.
Story first published: Tuesday, June 19, 2012, 10:02 [IST]

Get Notifications from Tamil Indiansutras