•  

உங்க டீன் ஏஜ் குழந்தைகள் டேட்டிங் போறாங்களா?

 
"டேட்டிங்" என்ற சொல் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் சகஜமாகிவிட்டது. முன்பின் தெரியாத ஒருவருடன் செல்வது டேட்டிங் கிடையாது. நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித்து செல்வதுதான் டேட்டிங். இப்படி செல்லும்போது கண்ணியப் பேச்சுடன் கட்டுப்பாட்டுக்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்களின் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு டேட்டிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.டேட்டிங் செல்வது என்றாலே அந்த ஆணின் மனதில் 90சதவீதம் செக்ஸ் பற்றிய சிந்தனை தான் இருக்கும்.உடல்ரீதியான உரிமைகளை எடுத்துக்கொள்ளவே பெண் நண்பிகளை ஆண் நண்பர்கள் வெளியே அழைத்துச் செல்கின்றனர்.டேட்டிங் என்பது அவர்களுக்கு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக நினைக்கின்றனர்.நண்பருடன் செல்ல நண்பி தயார் என்று கூறிவிட்டாலே,அந்த நண்பி எதற்கும் சம்மதிப்பாள் என்று அந்த ஆண் நண்பர் நினைத்துக்கொண்டு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள தவறுவதில்லை.தொடர்ந்து தவறு நடந்துவிட்டாலும் அந்த நண்பியைத் திருமணம் செய்துகொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.சில ஆண் நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருந்துவிட்டுச் செல்கின்றனர். டேட்டிங் என்பது முட்கள் நிறைந்தது. முட்கள் குத்தாமல் பார்த்துக்கொள்வது அவரவர்களுடைய பொறுப்பு,கடமை என்கின்றனர் நிபுணர்கள்.இன்றைய சூழ்நிலையில் ஆணுடன் பெண்ணோ,பெண்ணுடன் ஆணோ உறவு வைத்திருந்தால் தான் சரியான மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர்.அல்லது அவர்களுக்கு ஏதோ மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்கின்றனர்.இந்த உந்துதல் கட்டாயம் இவர்களை நண்பர்களாகத் தூண்டுகிறது. பெரும்பாலும் 16வயது முதல் 25வயதுக்கு ஆண், பெண்கள் டேட்டிங் செல்வதை தங்களது செக்ஸை வெளிப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.டேட்டிங்கில் ஆண் பெண் தனியே சந்தித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் இவர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளத் தூண்டுகிறது.ஆண் நண்பருடன் டேட்டிங் செல்ல தயாராகும் பெண்களில் சிலர் எதற்கும் துணிந்துதான் செல்கின்றனர்.அந்த ஆண் நண்பரை நாம் இழந்துவிடுவோமோ என்ற பயம்-ஆதங்கம் அவர்களை எந்தக் கட்டுப்பாட்டையும் மீறிச் செல்லத்தூண்டுகிறது.செக்ஸ் உறவுக்கு ஆண் நண்பரால் தூண்டப்படும்போது அப்பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறார்.சமீப காலமாக தொலைக்காட்சி,நாவல்கள்,திரைப்படங்கள் ஆகியவை டேட்டிங்கில் நடக்கும் சமாச்சாரங்களை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.காதல் வயப்படுவதற்கு ஊக்குவிக்கின்றன. இந்த விஷயத்தில் ஆணை மட்டும் பழிசுமத்தக்கூடாது.பெண்ணும் இதற்குச் சம்மதித்துத்தானே செல்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனிமையில் இருக்கும்போது எல்லைமீறிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். சில ஆண் நண்பர்கள் நீ என்னிடம் அன்பாக இருப்பது உண்மையானால் இதற்கும் சம்மதிக்க வேண்டும் என்று பிளாக்மெயில் செய்கின்றனர். இங்கேதான் அந்தப்பெண்,தன்னுடைய பாதுகாப்பு,எதிர்காலம் நற்பெயர் குறித்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.முடிவு உணர்ச்சிகரமானதாக இருக்ககூடாது.இவற்றை தவிர்க்க டேட்டிங் செல்லவேண்டாம் என்று ஒரு வரியில் கூறிவிட்டால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது. பொறுப்பான நடவடிக்கை மூலமே பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அதே சமயம் அனைத்து நண்பர்களும் இதுபோன்று இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து பெண்களுக்கு தவறான வழிகாட்டலைக் கொடுக்கக்கூடாது.அப்படிக் கொடுத்தால் பாலியல் பாகுபாடு,வெறுப்புகள் ஏற்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைத்துவிடவில்லை.டேட்டிங் என்ற கலாசாரமே ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம்விட்டுப்பேசி, ஆரோக்கியமான முறையில் நட்புச் செலுத்துவதற்காகவே ஏற்பட்டது. இந்த உறவில் குழப்பம் ஏற்படும்போதோ ஆண்மீது பெண் கவர்ச்சியோ,பெண் மீது ஆண் கவர்ச்சியோ,ஏற்படும்போது தான் வழி மீறல்,விதி மீறல் எல்லாம் ஏற்படுகின்றன.எப்பொழுதுமே நாம் சரியாக இருந்தால் எல்லாமே நலமாக இருக்கும் என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும். ஆண் நண்பர்களுடன் தனித்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நமது உள் மனம் கூறும் வார்த்தைக்கு மதிப்பு தரவேண்டும். இந்த சூழ்நிலை நமக்கு சரிப்பட்டு வராது. தடம் மாறிவிடுவோமோ என்று உள்ளுணர்வு எச்சரித்தால் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்த்துவிடுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம்.திருமணத்திற்கு முன்பு செக்ஸ் கூடாவே கூடாது என்பதில் தெளிவாக இருங்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். உறவுக்கு வற்புறுத்தினால் கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். தனியாக சந்திக்கும் சந்தப்பங்களில் பாலியல் உணர்வுகளை தூண்டுவது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விடுமாறு உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
English summary
Dating is a time of social experimentation for teens. It’s a time to test out which type of partners appeal to them, and how they can negotiate a romantic relationship. But it can also be a confusing time and a difficult time for parents too. “Today” contributor Dr. Gail Saltz, a psychiatrist with New York Presbyterian Hospital, has some advice.
Story first published: Friday, June 22, 2012, 15:05 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more