•  

தமிழ்நாட்டில் அதிகமாக விற்பனையாகும் செக்ஸ் பொம்மைகள்!

Sex Toys
 
சென்னை நகரில் உள்ள மல்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஸ்டோர்களிலும், மிகப்பெரிய மருந்து கடைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் செக்ஸ் பொம்மைகள் விற்பனையாகிறதாம்.முன்பெல்லாம் ஆன் லைனிலோ அல்லது ரகசியமாகவோ ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தவர்கள் இப்போது ஸ்டோர்களுக்கு நேரடியாகவே வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளனராம். தாமதமாகும் மற்றும் செலவு மிகுந்த திருமணம் மற்றும் திருமணமாகாமல் இருப்போர், திருமணம் ஆகியும் செக்ஸ் சரியாக கிடைக்காமல் அவதியுருவோர் ஆகியோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காட்டும் ஆரோக்கியமற்ற அறிகுறியாகவே உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பலருக்கும் படுக்கை அறைகளில் விதம் விதமான முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆர்வம் இப்போது அதிகரித்துள்ளது. தங்களது பெட்ரூமை நிகழ்வுகள் நிரம்பிய அறையாக வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர். பலருக்கும் இப்போது செக்ஸ் டாய்ஸ் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்பை விட இது தற்போது பெருமளவில் உள்ளது.பார்ட்னர் இல்லாதவர்களிடம்தான் முன்பு இதுகுறித்த ஆர்வம் இருக்கும். ஆனால் தற்போது பார்ட்னர் உள்ளவர்களும் கூட இதுகுறித்து ஆர்வமாகியுள்ளனர். அப்படி என்னதான் இருக்கிறது அதில் என்ற ஆர்வத்தால் இவர்கள் செக்ஸ் பொம்மைகளை வாங்குகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செக்ஸ் தவிர்க்க முடியாதது. அதை ஆரோக்கியமான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள்.செக்ஸ் பிரச்சினை தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் செல்லும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் டாய்ஸ்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு உடலறுவில் பிரச்சினை இருக்கிறது. பலர் தனியாக உள்ளவர்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.தற்போது பெரும்பாலோனோரும் தங்களது பிரச்சினைகளுக்குரிய நிவாரணமாக செக்ஸ் டாய்ஸ் வந்திருப்பதைப் பலரும் புரிந்து கொண்டு அதை நாடி வருகிறார்கள். இதற்காக அவர்கள் கூச்சப்படுவதில்லை. இது நல்ல விஷயம்தான்.ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் மருத்துவர்கள்.இந்தியாவுக்கு செக்ஸ் டாய்ஸ் என்பது புதிய விஷயமல்ல. ஹரப்பா நாகரீகத்திலேயே அது இருந்திருக்கிறது. காமசூத்ராவிலும் கூட செக்ஸ் மகிழ்ச்சிக்கான செயற்கை விஷயங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
English summary
As they shop for toothpaste and sunscreen many people are picking up sex toys from retail outlets as well. For years, people bought vibrators discreetly in the city's grey market or ordered them online. But lately, many take them off the shelves of retail stores or pharmacies.
Story first published: Thursday, June 21, 2012, 10:27 [IST]

Get Notifications from Tamil Indiansutras