காமசூத்திரத்தை கற்றுக்கொடுப்பதற்கு ஆட்கள் தேவையில்லை. ஆனாலும் என்னதான் நிபுணர்களாக இருந்தாலும் அவசரகதியில் ஈடுபடும்போது அடிபட நேரிடும். தலையுடன் தலை முட்டிக்கொள்வதால் சின்னதாக காயம் ஏற்படும். உதட்டில் முத்தமிடும்போது சின்ன சின்ன காயங்கள் ஏற்படுவது இயல்புதான். இது எரிச்சலை ஏற்படுத்தும்.
தலைமுடியை பிடிக்கும்போது சிக்கல் இருந்தால் வலி அதிகமாகி சங்கடங்கள் ஏற்படலாம். அதேபோல் ஒருவரின் விரல் மற்றொருவரின் கண்களில் பட்டு சில சமயங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற நேரங்களில் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் முழு மகிழ்ச்சி கிடைக்காது. சிறுநீர்ப்பை காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். சிறுநீர் கழிக்காமல் பாலுறவு கொள்வோருக்கு சில நேரங்களில் வலி ஏற்படக்கூடும். எனவே சிறுநீர் கழிக்கத் தோன்றினால் அதனை முடித்து விட்டு தொடங்குங்கள்.
பொதுவாகவே பாலுறவுக்கு முன் மது அருந்துதல் போன்ற தூண்டுதல் பானங்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இயல்பான உறவை அது பாழாக்கிவிடும். அதேபோல் உங்களின் சுவாசக் காற்று எதிர்பாலினத்தவர் மீது படும்போது, வெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்காமல் பார்த்துக் கொள்தல் வேண்டும்.
முடிந்தால் வாயில் போட்டு மெல்லும் சில வகை மவுத் ரெப்ரஷனர்' பயன்படுத்திய பின் உறவு கொள்ளலாம். அதிக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் போது இருவருக்குமே மகிழ்ச்சியை அளிக்கும்.
புதுமணத் தம்பதிகளுக்கு சின்ன சின்ன சங்கடங்கள் வலிகள் ஏற்படலாம். இது பழக பழக வரும் வித்தைதான். ஆண்டுகள் செல்லச் செல்லத்தான் நீண்ட நேரம் உறவில் ஈடுபடமுடியும். எனவே குறைந்த நேரத்தில் முடிந்து விடுகிறது என்பதற்காக வருத்தப்படவேண்டாம். அதற்காக மருந்தோ, மாத்திரையோ சாப்பிடுவது வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.