செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வதற்கு இப்பொழுது பல வழிகள் உள்ளன. இணையதளங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகள் வருகின்றன. அதேபோல் உணர்வுகளை தூண்டும் சில புத்தங்கள், வீடியோக்களை பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களுக்கு வெட்கம் அதிகம் இருக்கும். எனவே பெண்களை அணுகும்போது கவனம் தேவை. எடுத்த உடனே உறவுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம். கொஞ்ச நேரம் பேசலாம், பிடித்தவைகளை கேட்டு அதற்கேற்ப செயல்படலாம். எதையும் மெதுவாக தொடங்குங்கள். வசதியாக, ரிலாக்ஸ்சாக கொண்டு உங்கள் வழிக்கு கொண்டு வாருங்கள். அதுதான் தாம்பத்யத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அன்பை வெளிப்படும் அற்புத மொழி முத்தம். அது மகிழ்ச்சியின் திறவுகோல். எனவே முதலில் முத்தத்தில் இருந்து தொடங்குங்கள். அது பெண்களின் உணர்வுகளை தூண்டும். பெண்ணின் மென்மையான உதட்டில் முத்தமிட உங்களுக்கான அனுமதி உடனே கிடைக்கும். அதற்காக அவசரப்பட வேண்டாம். மென்மையான அணுகுமுறையே வெற்றிக்கான வழி என்கின்றனர் நிபுணர்கள்.
காண்டம் உபயோகிப்பது எப்படி என்பது பற்றி ஆண்களுக்கு அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய விசயமாகும். ஏனெனில் பெண்களுக்கு பால்வினை நோய் ஏற்படாமல் தடுப்பதில் காண்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. செக்ஸ் பற்றிய அடிப்படை விசயங்களில் இது முக்கியமான ஒன்றாகும்.
முன்விளையாட்டுக்கள் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று கட்டித் தழுவுதல், முத்தமிடுதல், சுவாரஸ்யமாய் பேசுதல் போன்ற டெக்னிக்குகள் தெரிந்திருக்க வேண்டும். அது பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு உச்சக்கட்டத்திற்கு எளிதாக இருக்கும். முக்கியமான விசயம் எந்த நேரத்திலும் பதற்றமடையாதீர்கள். அது உறவிற்கு நல்லதல்ல.
அதேபோல் ஒரு சிலருக்கு தொடக்கம் சரியாக இருக்கும். ஆனால் முடிவுதான் சொதப்பிவிடும். எனவே எதற்கும் அவசரப்படாதீர்கள். அதேபோல் உறவுக்கு பிந்தைய அணுகுமுறை என்பது அவசியமானது பெரும்பாலான பெண்கள் அதைத்தான் விரும்புகின்றனர். சிறிது நேரமாவது அணைத்தபடி உரையாடவேண்டும் இந்த அடிப்படைதான் மகிழ்ச்சியான தாம்பத்ய உறவுக்கு அஸ்திவாரமிடும் என்கின்றனர் நிபுணர்கள்.