ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.
ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.
போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.