ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து பொறாமைப்படுவதைத்தான் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம். அவ என்ன பெரிய இவளா, எதுக்குப் போயி இவ பின்னாடியே போறாங்க என்று பொறுமலை வெளிப்படுத்தும் பெண்களைப் பார்க்கலாம். அவளை விட நான் ஒரு படி தூக்கலாத் தெரியனும் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு மேக்கப் உள்ளிட்ட இத்யாதிகளில் இறங்கும் பெண்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த நிலை இப்போது வெகுவாக மாறி விட்டதாக இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெண்கள், ஆண்களிடம் நெருக்கமாக இருப்பதை விட பெண்களிடம் நெருக்கமாக இருப்பது அதிகரித்து வருகிறதாம்.
குறிப்பாக அழகாக இருக்கும் பெண்கள் மீது முன்பு போல இப்போது பொறாமை வருவதில்லையாம் பெண்களுக்கு, மாறாக அவர்கள் பால் ஈர்க்கப்படுகிறார்களாம்.
மேலும் பெண்கள் மீது மோகம் கொள்வதை பெண்கள் பெரிய தவறாக கருதுவதில்லையாம்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில், 60 சதவீதம் பேர், தாங்கள் அழகாக தோற்றமளிக்கும் பிற பெண்கள் மீது மோகம் கொண்டதாக கூறியுள்ளனர். 45 சதவீத பெண்கள், , மற்ற பெண்களுக்கு முத்தம் கொடுத்ததாக கூறியுள்ளனர். 50 சதவீதம் பேர், பெண்ணும், பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்த விஷயங்களை அறிந்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
தைரியமாக, நேருக்கு நேராக, பட் பட்டென்று பேசும் பெண்ணைப் பார்த்தால் எனக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனராம். வெறும் தோழியாக மட்டும் அவர்களைப் பார்க்க முடிவதில்லை, மாறாக, காதல் உணர்வுடன் அவர்களைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
என் தோழி என்னைப் போல இல்லை, நல்ல ஆளுமையுடன் இருக்கிறாள், தைரியமாக பேசுகிறாள். அவளிடம் பேசும்போதும், இருக்கும்போதும் ரொம்ப பாதுகாப்பாக உணர்கிறேன். எனவே அவளை தோழியாக மட்டுமே நான் பார்ப்பதில்லை, பாய் பிரண்ட் போலத்தான் நினைத்துக் கொள்கிறேன் என்று சில பெண்கள் கூறியுள்ளனர்.
ஆண்கள் நண்பர்களாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை விட பெண்கள் தோழிகளாக எடுத்துக் கொள்ளும் காலம் மிக மிக குறுகியதாக இருக்கிறதாம். அதாவது பார்த்து, நாலு வார்த்தை பேசியதுமே பெண்கள் நெருக்கமான தோழிகளாகி விடுகிறார்களாம். சிலருக்கு இது வேறு மாதிரியான பாதைக்கு இட்டுச் செல்கிறதாம்.
மன ரீதியாக செக்ஸ் உணர்வுக்கான வடிகால் கிடைக்காமல் சிரமப்படும் பெண்கள், தங்களது தோழிகளையே அதற்குப் பயன்படுத்த முனைவதாக கூறுகிறது இந்த ஆய்வு. காரணம், அதில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் உணவர்வதால், என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.
அப்புறம் முக்கியமான விஷயம், இந்தக் கருத்துக் கணிப்பு வழக்கம் போல வெளிநாட்டில் எடுக்கப்பட்டதுதான். எனவே நம்மவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!