டயர்டா இருக்குப்பா
படுக்கையறை என்பது தம்பதியரின் தனி சாம்ராஜ்யம். அங்கே கணவன் ஆசையோடு காத்திருக்கையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வரும் மனைவியோ டயர்டா இருக்குப்பா இன்னைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டால் மொத்த சந்தோசமும் வடிந்து விடும். அதேசமயம் சிறிதுநேரம் ஓய்விற்குப் பின் கணவரை தாஜா செய்து சந்தோச மனநிலைக்கு கொண்டு வரலாம். அப்புறம் தம்பதியரிடையே உறவிற்கு எந்த தடங்கலும் ஏற்படாது.
பேசி வெறுப்பேத்தாதீங்க
படுக்கையறையில் வார்த்தைகளுக்கு தேவையிருக்காது. தழுவல், முத்தம், தலையணை சண்டை என ரொமான்ஸ் செயல்களுக்குத்தான் வரவேற்பு இருக்கும். எனவே அந்த நேரத்தில் அலுவலகத்தில் நடந்த சம்பவமோ, பக்கத்து வீட்டில் நடந்த சண்டையை பேசியோ வெறுப்பேற்ற வேண்டாம்.
சுத்தமா இருக்கணும்
பெண்களைப் பற்றி பெரும்பாலான ஆண்கள் வாசிக்கும் புகார் என்னவென்றால் அவர்கள் தங்கள் உடம்பினை பளிச் என்று சத்தமாக வைத்துக்கொள்வதில்லை என்பதுதான். படுக்கையறையில் இது ஆண்களின் மூடு மாற காரணமாகிவிடும். எனவே ஹேர் ரிமூவரை பயன்படுத்தி சுத்தமாக தேவையற்ற இடங்களில் உள்ள முடிகளை நீக்கிவிடுங்கள். அப்பொழுதுதான் படுக்கையறையில் பளிச்சென்று கணவரை கவரமுடியும்.
டிரஸ்ஸை கரெக்டா போடுங்க
வீட்டு வேலை செய்யும் போது போடப்படும் நைட்டி சமையல் சாமான்கள் பட்டு அழுக்கேறியிருக்கும். அதே உடையோடு படுக்கையறைக்குள் சென்றாலே கணவருக்கு சமயலறை வாசனைதான் வீசும். அதுவே மகிழ்ச்சியை வழிந்தோட செய்துவிடும். எனவே படுக்கைக்கு போகும் முன்பு சுத்தமாக குளித்து விட்டு நறுமணத்தோடு போங்களேன். உங்கள் துணை உங்களை தூக்கி தட்டாமாலை சுற்றுவார்.
சண்டையும் சமாதானமும்
படுக்கைக்கு போகும்முன் போடப்படும் தேவையற்ற சண்டைகளால் தம்பதியரிடையே விரிசல்களை ஏற்படுத்திவிடும். எனவே என்னதான் சண்டை என்றாலும் அதை படுக்கையறைக்குள் கொண்டு செல்லாதீர்கள். அறைக்குள் நுழைந்து தாளிட்ட உடன் சமாதானக் கொடியை பறக்க விடுங்கள். அதுதான் இருவருக்குமே நல்லது.